உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது."

75

(குறள்.235)

அன்புவடிவான சிவத்தை அன்பினால்தான் அடையமுடியும். மக்களிடம் அன்பில்லாதவன் இறைவனிடம் அன்பு செய்ய முடியாது.

னி, வீடு அல்லது பேரின்பம் ஒருவகைப்பட்ட தாகவே யிருக்க, அதை நால்வகை வாயிலின் பயனாக உடனுலகம் (சாலோகம்), உடனண்மம்(சாமீபம்), உடனுருவம்(சாரூபம்), உடனொன்றம்(சாயுச்சியம்) என நால்வகைப் படுத்துவது, உத்திக்கும் தமிழ மரபிற்கும் ஒத்த தன்று.

மும்மாசு

"மூன்றுள குற்ற முழுதும் நலிவன

மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே.

"காமம் வெகுளி மயக்க மிவை கடிந்

தேமம் பிடித்திருந் தேனுக்கு....

என்று திருமூலரும்,

""

"காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்.”

(திருமந்.2396)

(திருமந்.2397)

(குறள்.360)

என்று திருவள்ளுவரும், கூறியுள்ளவாறு, மும்மாசுகள் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றே. இவையே ஆணவம் மாயை காமியம் என்றும் சொல்லப்படும். ஆணவம் என்பது செருக்கு. அவன் ஆணவம் பிடித்தவன் என்னும் உலக வழக்கையும், அருணந் தியார் முதற்கண் மெய்கண்டாரின் இளமை நோக்கி எள்ளிச் செருக்கோடு நின்று, "ஆணவம் எவ்வாறிருக்கும்? என்று வினவிய தற்கு, மெய்கண்டார் அருணந்தியாரைச் சுட்டி “அது இவ்வாறிருக் கும்.” என்றதையும், நோக்குக. ஆள் - ஆண் ஆணவம். ஆணவத்தால் தோன்றுவதே வெகுளி. மாயை என்பது மயக்கம். காமியம் என்பது து காமம். அதுவே தீவினைகட் கெல்லாம் வேர்.

در

'ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும்.

(குறள்.370)

ஆணவம் அணுவளவின தென்றும் மயக்கஞ் செய்வதென்றும், காமியம் கன்மமென்றும், ஆரியர் கூறியது தவறாம். ஆணவம் என்னுஞ் சொல்லை ஆரியமாக்கவே, அதை அணு என்பதன் திரி