உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழர் மதம் மொழிநூற்கும் ஒருசிறிதும் பொருந்தாது. இது, North, East, West, South என்னும் சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பே ‘NEWS' என்னும் சொல் லென்றும், அது நாற்றிசையினின்றும் வரும் செய்திகளைக் குறிக்கு மென்றும், கூறுவ தொத்ததே.

சிவ என்பது, சிவம் என்னும் தென்சொல்லின் வடமொழி வடிவம். அதன் அகர வீறு ஆகார வீறானது வடமொழி யுருபு புணர்ச்சி விளைவு. 'ய' வடமொழி 4ஆம் வேற்றுமை யுருபு.நம: என்பது, நமஸ் என்னும் வடசொல்லின் திரிபான நம: என்பதன் கடைக்குறை அல்லது ஈறு கேடு.இங்ஙனம், சிவாய நம: என்னும் வடமொழித் தொடரைச் சிவய நம என்று திரிப்பின், அது வடமொழித் தொடருமாகாது தென்மொழித் தொடருமாகாது இடைத்தட்டில் நிற்பதாகும். அதையும் எழுத்தெழுத் தாகப் பிரிப்பின் ஒன்றுமில்லாது போம்.

சிவம் என்பது, செம் என்னும் அடிப் பிறந்து, ஒருவகையிலும் திரியாது என்றும் ஒரே தன்மைத்தாய் நிற்கும் செம்பொருளாகிய கடவுளைக் குறிக்கும் தென்சொல்.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு."

என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க.

"செம்பெரு மானே சிவபுரத் தரசே"

(குறள்.358)

(திருவாச. வாழாப் பத்து, 2)

கள் - செள் - செய் - செய்ம்மை - செம்மை - செம்.

செம் - செவ் - செவ - சிவ - சிவம் - சிவன்.

செம்மை = தீயின் நிறமாகிய சிவப்பு, தீயின் தன்மையாகிய நேர்மை, கோடாமை, திரியாமை, நடுநிலை.

சிவ என்பது தமிழிற் சிவன் என்பதன் விளிவடிவம். அதைச் 'சி', 'வ', என்று எழுத்துப் பிரிப்பின் அச் சொல்லாகாது.

,

"சீறிட்டு நின்று சிவாய நமவென்ன

""

(910)

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்"

(956)

"சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோத”

(958)

"தேறாச் சிவாய நமவெனத் தேறிலே”

(2460)

"தெளிய வோதிச் சிவாய நமவென்னும் "

(2659)

"தெள்ளமு தூறச் சிவாய நமவென்று”

(2663)