உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

"திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும்"

(2665)

'சிவாய நமவெனச் சித்த மொருக்கி

(2669)

"உருவில் சிவாய நமவென வோதே"

(2752)

என்று திருமூல நாயனாரும்,

79

"சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு"

(நல்.15)

என்று ஔவையாரும் பாடியிருப்பதால், சிவாய நம என்பதே மூல வென்றும், அது இருமொழித் தொடரென்றும், சிவய நம என்பது அதன் திரிபென்றும், சிவ என்னும் நிலைச்சொல்லே தென் சொல் லென்றும் அறிந்துகொள்க.

இனி, சிவய நம என்பதை நம சிவய என்று முறை மாற்றி அது பருவியல் ஐந்தெழுத்து(ஸ்தூல பஞ்சாக்ஷர) என்றும், சிவய நம என்பது நுண்ணியல் ஐந்தெழுத்து(ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், சிவய சிவ என்பது அதிநுண்ணியல் ஐந்தெழுத்து(அதிஸுஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், திருமந்திர உரையாசிரியர் கூறுவர். ஆயின், மூலத்திற் சிவாய என்று வகர ஆகாரமுள்ள வடிவேயுள்ளது. ஆகவே, யாப்பு என்னும் தென்சொல்லின் முதலெழுத்தும், சிவாய என்னும் வடசொல்லின் இடையெழுத்தும், முறையே, 'ய' என்று குறுகின தாகக் கொள்ளப்பட்டதும் 'வ' என்று குறுக்கப்பட்டதும் தெளிவாம்.

இனி, 'சிவய', 'சிவ', 'சி' என்பவற்றையும் திருவைந்தெழுத்தின் வகைகளாகக் கொள்ளுவர். அவை அங்ஙன மாகாமை வெளிப்

படை.

தமிழரை மயக்கிச் சிவமதத்தை ஆரிய வண்ணமாக்கற்கே, சிவாய நம என்னும் இருமொழித் தொடர்த் திரிபின் எழுத்துகட்கு வெவ்வேறு குறிப்புப் பொருள் குறித்துள்ளனர். அவ்வாறே,

'சிவன்சத்தி சீவன் செறுமல மாயை'

என்று திருமூலரும் பாடி யுள்ளார்.

""

(2660)

ஐந்து என்னும் தொகைபற்றி, திருவைந்தெழுத் தென்பவற்றைச் சிவன் கைகால்களொடும் ஆடுமன்றங்களொடும் தொடர்புபடுத்திக் கூறுவர்.

"திருந்துநற் சீயென் றுதறிய கையும்

அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும்

பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந் திருந்தநத் தீயாகுந் திருநிலை மவ்வே.

""

(திருமந்.2751)

'சி' யாப்பு நோக்கிச் 'சீ' என நீளும். அதை 'நாயோட்டும்

மந்திரம்' என்பர் திருமூலர்.