உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தமிழர் மதம்

"சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக் கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்

தங்கும் மகரமது தான்.'

""

-

"மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி பாலாம்செம் போடுமண் பற்றல்போல் மேலாம் அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல் தவநெல்லை குற்றாலம் தான்.

(உ.வி.33)

சிவன் திருநடத்தை ஐந்தொழில் தடம் என்பதால், இரு மொழித் திருவைந்தெழுத்து சிவன் ஐந்தொழிலொடும் தொடர்பு படுத்தப் பெறும்.

இனி, ஓகநூலார், மாந்தனுடல் தொடை முதல் மண்டைவரை இருமொழித் திருவைந்தெழுத்து வடிவில் அமைந்திருப்பதாகவும், வரைந்து காட்டுவர்.

'சிவாய நம' என்பதில், ய, ந, ம, என்னும் மூவெழுத்துகளையும் பிரித்துக் குறிப்புப் பொருள் கூறின், ராமாய நம, நாராயணாய நம, குமாராய நம, கணேசாய நம என்பவற்றிலும் அவ் வெழுத்துகளைப் பிரித்து அக் குறிப்புப் பொருள் கூறல் வேண்டும். அங்ஙனங் கூறும் வழக்கம் இல்லை. அதோடு அவை ஐந்தெழுத்தும் ஆறெழுத்தும் ஏழெழுத்துங் கொண்ட தொடர்களைச் சேர்ந்தவை.

திருமூலர் தலைசிறந்த ஓகியரும் மெய்ப்பொருளோதியரும் (தத்துவஞானியரும்) ஆதலால், “அவர் எங்ஙனம் தவறாகக் கூறி யிருக்க முடியும்?" எனச் சிலர் வினவலாம். இதற்கு விடை, அவர் காலத்திற்கு முன்பே, ஆரியச் சொற்களும் கருத்துகளும் சிவனி யத்தில் வேரூன்றி விட்டதனாலும், அவர் காலத்திலும் மொழியா ராய்ச்சியின்மையாலும், அவர்போலும் பெரியார்க்கும் ஆரியக் கலப்பை அறியவும் அதை நீக்கவும் இயலாது போயிற்றென்பதே.

இறைவன் திருவருள் பெற்றவ ரெல்லாம் எல்லா மறிந்தவர் என்று கருதுவது, அறியாமையின் பாற்பட்டதே. இறைவன் ஏற்படுத்தியவாறு, ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறிவுத் துறையி லேயே வல்லுநராதல் கூடும். கணித அறிஞர் வரலாறறியாததுபோல், மெய்ப்பொருளியலாரும் அறிவியல் அறியார். மொழிநூல் ஓர் அறிவியல். அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குமரிநாட்டில் தோன்றியதேனும், ஆரியரால் மறைக்கப்பட்டுவிட்டது.

திருமூலர் போல்வார் திங்களை யடையும் வான்கலத்தைத் தம் மனவலியால் தடுக்கமுடியும். ஆயின், அதன் அமைப்பை விளக்க முடியாது. மனவலி வேறு; நூலறிவு வேறு.