(பாக.4:3:35)
"பருகுவான் போல நோக்கி"
(கூர்ம. திருக்கல். 61)
812. உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினு மென்.
(இ-ரை.) உறின் நட்டு அறின் ஒருவும் - தமக்கொரு பயனுள்ளவிடத்து நட்புச்செ-து அஃதில்லாதவிடத்து நீங்கிவிடும்; ஒப்புஇலார் கேண்மை - உள்ளத்தாற் பொருந்தாதவரது நட்பை; பெறினும் இழப்பினும் என் - பெற்றாலும் பெற்றபின் இழந்தாலும் இரண்டிற்கும் என்ன வேறுபாடுண்டு? ஒன்றுமில்லை.
தந்நலமே கருதுபவர் உள்ளத்தாற் பொருந்தாராதலின் ஒப்பிலார் என்றும், அவர் நட்பு இருப்பின் ஆக்கமும், இல்லாவிடின் கேடும் இன்மையால் 'பெறினும் இழப்பினு மென்' என்றும், கூறினார். ஒத்தல் உள்ளம் ஒன்றுதல். 'ஒரூஉம்' இன்னிசை யளபெடை.
813. உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர்.
(இ-ரை.) உறுவது சீர்தூக்கும் நட்பும் - நட்கப்படுவாரின் நலத்தையும் அருமையையும் நோக்காது அவரால் தமக்கு வரும் பயனைமட்டும் அளந்து பார்க்கும் தந்நல நண்பரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பவரை உள்ளத்திற் கொள்ளாது அவர் கொடுக்கும் பொருளைமட்டும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும் விலைமகளிரும்; கள்வரும் - பிறர் கேட்டையும் அவர் படுந் துன்பத்தையும் நோக்காது தமக்குக் கிடைக்கும் பொருளைமட்டும் நோக்கிக் களவு செ-வாரும்; நேர் - தம்முள் ஒத்தவராவர்.
தந்நலமே கருதிப் பிறர்பொருளை வஞ்சித்துப் பெறுதலில் மூவரும் ஒத்தலின் 'நேர்' என்றார். 'நட்பு' ஆகுபொருளி.
814. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.
(இ-ரை.) அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் - போர்வரு முன்பெல்லாம் தன்னை எந்நிலைமையிலும் தாங்குவது போன்றிருந்து, அது வந்தபின் போர்க்களத்தில் தன்னைக் கீழே தள்ளிவிட்டு