உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104

திருக்குறள்

தமிழ் மரபுரை


ஓடிப்போகும் பயிற்சியில்லாக் குதிரையை ஒத்தவரின்; தமரின் தனிமை தலை நட்போடியிருத்தலினுந் தனித்திருத்தல் சிறந்ததாம்.

தீய நண்பர் துன்பம் வருமுன் பெல்லாம் நிலையான துணையாவார் போன்றிருந்துவிட்டு, அது வந்தபின் நீங்கிவிடுவரென்பது, உவமத்தாற் பெறப்பட்டது. ஆற்றறுத்தல் என்பதற்கு 768 ஆம் குறளுரையில் உரைத்தது போல் உரைக்க. கல்லாமை போர்ப்பயிற்சி யில்லாமை.

"ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையுங்

கந்து மறமுங் கறங்குளைமா”

(பு.வெ.355)

என்பதனால் குதிரையின் போர்ப்பயிற்சி அறியப்படும். மல்லம், மயில், குரங்கு, வல்லியம் (புலி), அம்பு எனச் செலவு (கதி) ஐவகை. சாரியை மண்டலம் என்னும் சுற்றுவரவு. 'கந்து' (வ) தாண்டு. மறம் - போர்முரண். தமர் - தமர்மை: ஆகுபொருளி. 'தனிமை' ஏமாற்ற மின்மைக்கும் அழிவின்மைக்கும் ஏதுவாகலின் அதைத் 'தலை' என்றார்.

815. செ-தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
யெ-தலி னெ-தாமை நன்று.

(இ-ரை.) செ-து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - பாதுகாப்புத் தருமென்று கருதிச் செ-துவைத்தாலும் பாதுகாப்பாகாத கீழோரது தீநட்பு; எ-தலின் எ-தாமை நன்று - பெற்றிருப்பினும் பெற்றிராமையே நல்லது.

'எ-தலி னெ-தாமை நன்று' என்பதைத் 'தமரிற் றனிமை தலை' என்பதுபோற் கொள்க. 'சாரா' என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 'புன்கேண்மை' என்னும் பெயரைத் தழுவிற்று. 'சிறியவர்' இடைப் பிறிது வரல். சிறப்பும்மை தொக்கது.

816. பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.

(இ-ரை.) பேதை பெருங் கெழீஇ நட்பின் - அறிவிலானது மிக நெருங் கிய நட்பினும்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையாரின் பகைமை கோடி மடங்கு நல்லதாம்.

பேதை நட்புப் பல்வகைத் தீங்கை விளைத்தலானும், அறிவுடையார் பகை ஒரு தீங்கும் விளைக்காமையானும், 'கோடியுறும்' என்றார். பன்மை