எதிர்மறையும்மை ஒத்துக்கொள்வுப் பொருளது (concession). கூடா நட்பினர் சொல்லளவில் நல்லவற்றையே சொல்வராதலின், எதிர்மறைப் பொருள் விளைவையே தழுவும். ஒல்லை யுணரப்படுதலாவது நல்லவை தீயவையாக விரைந்து வெளிப்படல்.
827. சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்.
(இ-ரை.) வில் வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லின் வளைவாகிய வணக்கம் அதை ஏற்றவர்க்குத் தீமை செ-தலைக் குறித்தலால்; ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க - பகைவரிடத்துத் தோன்றும் பொ-யான பணிவுவணக்கம் தீமையன்றி நன்மை செ-தலைக் குறித்த தென்று கருதற்க.
உள்ளத்தொடு பொருந்தாமற் சொல்லொடுமட்டும் கூடிய வணக்க மாதலால், பொ-வணக்கத்தைச் 'சொல்வணக்கம்' என்றும், வில் அறிவில்லாப் பொருளும் பிறன்வினை கொண்டதுமாயினும், வளைதலுந் தீங்கு செ-தலுமாகிய வினையொப்புமையால் அதன் குறிப்பை யேதுவாக்கியும், கூறினார். வில்லியின் தீய குறிப்பு வில்வளைவின்மேல் நிற்றல்போல், பகைவரின் தீய குறிப்பும் அவர் உடல் வளைவின்மேல் நிற்றலால், அஞ்சிக் காத்துக்கொள்க என்பதாம்.
828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து.
(இ-ரை.) ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் குறிப்பிட்ட கைக்குள்ளும் கொல் படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும்.
கொல்லுதற்குப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம் முன்பு கைகுவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும் மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' என்றார். தம் இளக்கங்காட்டி அழுதாலும் தொழுதாலும், அவர் செயலானன்றிக் குறிப்பாலேயே அவரியல்பை யறிந்து காத்துக் கொள்க வென்பதாம்.
829. மிகச்செ-து தம்மெள்ளு வாரை நகச்செ-து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.