835. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.
(இ-ரை.) பேதை - பேதையானவன்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத்துன்பத்தை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ் வொருபிறப்புள்ளேயே தேடிக் கொள்ள வல்லவனாம்.
"வரும் பிறவிகளிலெல்லாந் தான் புக்கழுந்தும் நிரயத்தினை" என்றும், "முடிவில் காலமெல்லாம் தான் நிரயத் துன்பமுழத்தற் கேதுவாங் கொடு வினைகளை" என்றும், பரிமேலழகர் கூறியிருப்பது மிக வரையிறந்திருப் பதனாலும், எழுவகைப் பிறப்பிலும் அழுந்தும் நரகென்பது உத்திக்குப் பொருந்தாமையானும், இங்கு 'எழுமைச்' சொற்குத் தொகைப்பொருளே யன்றி வகைப்பொருள் கொள்ளப்படவில்லை. 'எழுமை' நிறைவு குறித்த மரபெண் களுள் ஒன்று. அது இங்கு நீண்ட காலத்தை யுணர்த்திற்று. 'அளறு' என்னும் பெயருக்கேற்ப 'அழுந்தும்' என்றார். ஆற்றுதல் செ-யமாட்டுதல். பேதை தனக்கு நெடுங்காலக் கேட்டைத் தானே தேடிக் கொள்ளுவான் என்பதாம்.
836. பொ-படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(இ-ரை.) கை அறியாப் பேதை வினை மேற்கொளின் - செ-யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செ-யின்; பொ-படும் ஒன்றோ - அதிற் புரைவிழுதல் மட்டுமோ; புனைபூணும் - அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும்.
'புரைவிழுதல்' துளைபடுதல்போல் உள்ளழிதல். புனை முதனிலைத் தொழிலாகுபெயர். பேதை வினைசெ-யின் வினையுங் கெட்டுத் தானும் கெடுவான் என்பதாம். பொள் - பொ-.
837. ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.
(இ-ரை.) பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஒருதொடர்பு மில்லாத அயலார் நிரம்ப வுண்ணத் தன் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினரும் உண்ணுதற்கின்றிப் பசியோடிருப்பர்.