112
திருக்குறள்
தமிழ் மரபுரை
(இ-ரை.) பேதைமையுள் எல்லாம் பேதைமை - பேதைமைக் குற்றங்க ளெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; கை அல்லதன்கண் காதன்மை செயல் - ஒருவன் தனக்குத் தகாத ஒழுக்கத்திற் பெருவிருப்பங் கொள்ளுதல்.
கையல்லது செ-தல், இருமைக்கும் ஆகாதென்று அறநூலாற் கடியப்பட்டனவும், தன் நிலைமைக்கு ஏற்காதனவுமான தீய செயல்களைச் செ-தொழுகுதல். 'கை' ஒழுக்கம்; ஆகுபெயர்.
833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
(இ-ரை.) நாணாமை - வெட்கப்பட வேண்டிய செயல்கட்கு வெட்கப் படாமையும்; நாடாமை - ஆ-ந்து பார்க்க வேண்டியவற்றை ஆ-ந்து பாராமையும்; நாரின்மை - எவரிடத்தும் அன்பின்மையும்; யாது ஒன்றும் பேணாமை - பேணிக் காக்க வேண்டிய எதையும் காவாமையும்; பேதை தொழில் - பேதை செயல்களாம்.
வெட்கப்பட வேண்டியவை பழி கரிசுகள் (பாவங்கள்). ஆராய வேண்டியவை நல்லனவும் தீயனவும் வேண்டுவனவும் வேண்டாதனவும். பேணவேண்டியவை குடிப்பிறப்பு, தன்மானம், ஒழுக்கம், கல்வி, நல்நட்பு முதலியன. இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பதுபற்றித் 'தொழில்' என்றார். 'பேதை' இருபாற் பொது.
834. ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.
(இ-ரை.) ஓதியுணர்ந்தும் - அடங்கியொழுகுதற் கேதுவான அறநூல்களைக் கற்று அவற்றின் பொருளையும் பயனையும் தெளிவாக அறிந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அவற்றைப் பிறர்க்கு விளங்க எடுத்துச் சொல்லியும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவற்றின்படி அடங்கி யொழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்தில் இல்லை.
பேதையார் இயல்பாக நல்லதையறியும் ஆற்றலில்லாதார். அறிவு நூல்களைக் கற்று அவற்றால் நல்லதை யுணர்ந்ததொடு, அதைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தான் அதைக் கடைப்பிடிக்காதவன் இருமடிப் பேதை யாதலின், அறியாப் பேதையினும் அறிந்த பேதை கடைப்பட்டவன் என்பதை யுணர்த்தற்குப் பேதையிற் பேதையா ரில்' என்றார்.