134
திருக்குறள்
தமிழ் மரபுரை
வினைசெ-யும் வகைகள் நால்வகை ஆம்புடைகளும், பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய வலக்காரங்களும், காலவிட வலிகளறிந்து சூழ்தலும், தும்பை யுழிஞை முதலிய போர்புரிதலும் முதலாயின. வலிமைப் படுத்தலாவது, பொருள்படை துணைகளைப் பெருக்குதல். தற்காத்தலாவது பல்வகையரணும் அமைத்துக்கொள்ளுதல். இறுமாப்புத் தம்மை யெவரும் வெல்ல முடியாதென்றும் தாம் பிறரை எளிதா- வெல்ல முடியுமென்றும் மகிழ்ந்திருத்தல். இக் குறளாற் போர் செ-யாமலே பகைவரை விலக்கும் வகை கூறப்பட்டது.
879. இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து.
(இ-ரை.) முள்மரம் இளைதாகக் கொல்க - களையவேண்டிய முள்மரத்தைக் கையினால் எளிதாகப் பிடுங்கியெறியும் கன்றுப் பருவத்தே களையாவிடினும், இளமரமாயிருக்கும் போதேனும் வெட்டி விடுக; காழ்த்த விடத்துக் களையுநர் கைகொல்லும் - அங்ஙனமன்றி அது முதிர்ந்தபின் களையின், அது தன்னைப் பலர்கூடி வெட்டினும் அவர் கைகளைப் பொறுத்தற்கரிய அளவு வருத்தும்.
களைய வேண்டிய பகையை அது மெலிதாயிருக்குந் தொடக்க நிலையிலேயே களைந்துவிடுக. அங்ஙனமன்றி அது வலுத்தபின் அதைப் பலர் கூடித் தாக்கினும் அது தாக்குவாரைத் தாக்கும் என்னும் பொருள் தோன்ற நிற்பதால், இது பிறிதுமொழிதல் என்னும் அணியாம். இதனாற் பகையைக் களையும் பருவம் கூறப்பட்டது.
880. உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
(இ-ரை.) செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மைப் பகைப்பவரின் செருக்கை அடக்கும் நிலைமை யிருந்தும் இகழ்ச்சியால் அதைச் செ-யாது விட்டுவிட்டவர்; மன்ற உயிர்ப்ப உளர் அல்லர் - பின்பு, உறுதியாக மூச்சுவிடும் அளவிற்கும் உயிர் வாழ்பவராகார்.
முன்பு மெலியராயிருந்த பகைவர் பின்பு வலியராகித் தம்மை வேரொடு களைதல் திண்ணமாதலின், 'உயிர்ப்ப வுளரல்லர் மன்ற' என்றார். "எலிப்பகை நாக முயிர்ப்பக் கெடும்" என்பதுபோல், அவர் உயிர்த்த அளவிலேயே இறந்துவிடுவர் என்று உரைப்பினும் அமையும். 'மன்ற' என்