னுஞ் சொற்கு முன்பு உரைத்தது போல் உரைக்க. இக் குறளால் பகையை முளையிற் களையாவழி நேருங் கேடு கூறப்பட்டது. முந்தின குறளும் இதுவும் பகை முதிர்ச்சியேபற்றிக் கூறினும், அது 'கைகொல்லும்' முதிர்ச்சியும் இது மெ-கொல்லும் முதிர்ச்சியும்பற்றியன என வேறுபாடறிக.
அதி.89 - உட்பகை
அதாவது, அகத்தாரே தன்னலம் நோக்கியும் கலாம்பற்றியும் தம் இனத்தாரைப் புறத்தாரான பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தல். இதுவும் ஒரு பகைத்திறமாதலின், பகைத்திறந் தெரிதலின் பின் வைக்கப்பட்டது.
881. நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு மின்னாவா மின்னா செயின்.
(இ-ரை.) நிழல் நீரும் இன்னாத இன்னா - மக்கள் இன்பமாக நுகரும் நிழலும் நீரும் பின்பு நோ- செ-வனவாயின் தீயனவேயாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னா ஆம் - அதுபோலத் தமக்குத் துணையாயிருக்க வேண்டிய தம்மைச் சேர்ந்தவர் இயல்புகளும் நன்மை செ-வனபோல் தோன்றித் தீமை செ-யின் தீயனவேயாம்.
தீய நிழலால் வரும் நோ- தலைவலி, கா-ச்சல் முதலாயின. தீய நீரால் வரும் நோ- யானைக்கால், பெருவயிறு (மகோதரம்) முதலாயின. தமர் என்பார் தம் குடும்பத்தாரும், தம் உறவினரும் தம் வகுப்பாரும், தம் கூட்டத்தாரும் தம் ஊராரும் தம் நாட்டாரும் தம் மொழியாரும் எனப் பல திறத்தார். முன் தோற்றத்தாலன்றிப் பின்விளைவாலேயே, பொருள்களும் மக்களும் முறையே நல்லனவுந் தீயனவும் நல்லவருந் தீயவருமாதல் அறியப்படும் என்பதாம். இக் குறளால் உட்பகையின் இயல்பு கூறப்பட்டது.
882. வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
(இ-ரை.) வாள்போல் பகைவரை அஞ்சற்க - கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர்க்கு அவ்வளவு அஞ்ச வேண்டுவதில்லை; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - ஆனால், உறவினர் போலிருந்து மறைவாகப் பகைக்கும் உட்பகைவரின் போலியுறவிற்கு மிகுதியாக அஞ்சுக.