901. மனைவிழைவார் மாண்பயனெ-தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளு மது.
(இ-ரை.) மனை விழைவார் மாண்பயன் எ-தார் - இன்பம்பற்றி மனைவியை அளவிறந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செ-யார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது - இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார், அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செ-தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப் பெண்ணின்பப் பித்தமே.
‘மனை' ஆகுபெயர். 'விழைதல்' ஆகுபெயர் போன்ற ஆகுவினை. 'பயன்' என்றது அறப்பயனை. இம்மைக்கேயுரிய பெண்ணின்பத்தினும் மும்மைக்கு முரிய அறப்பயன் சிறந்ததாதலின், அதனை 'மாண்பயன்' என்றார். வினை யென்பது பாலாற் பொருளீட்டும் வினையைக் குறித்தது. முப்பொருள்களுள் ஏனை யிரண்டும் பெறுதற்குக் கருவியாயிருக்கும் பொருட்பொருளை யீட்டுதற்குத் தடையாயிருத்தலின், மனைவி விருப்பப்படி யொழுகுதல் கூடாதென்பதாம். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
இ-ரை.) பேணாது பெண்விழைவான் ஆக்கம் - தன் ஆண்மை மேம்பாட்டைக் காவாது தன் மனைவிக்கு அடிமையாகுமளவு அவளைக் காதலிப்பவன் பெற்ற செல்வம்; பெரியது ஓர் நாணாக நாணுத் தரும் - தன் பாலார்க்கெல்லாம் மிகுந்த நாண முண்டாகுமாறு தனக்கு வெட்கக்கேட்டை விளைவிக்கும்.
'ஆக்கம்' என்று அடைகொடாமற் கூறியது, முதுசொம் என்னும் முன்னோர் தேட்டாகவோ மனைவிவழிச் சொத்தாகவோ பெறப்பட்ட தென்று குறித்தற்கு. பெண்வழிச் செல்வானுக்குப் பொருளீட்டும் ஆற்றலிராதென்பது கருத்து. செல்வத்தை நுகர்ந்தும் ஈந்தும் பயன்படுத்துபவள் மனைவியாதலின், ஆண்மைத் தன்மை அவளிடத்தும் பெண்மைத் தன்மை கணவனிடத்தும் உள்ளன வென்று ஆடவர் நாணிக் கடிந்துரைத்தபின், அவரை மீண்டும் பார்த்தற்கு அவன் நாணுதலால், 'நாணாக நாணுத் தரும்' என்றார்.
903. இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று நல்லாரு ணாணுத் தரும்.