உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருமை தன் மனைவிக்குப் பணியும் ஆண்மையின்மை; எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத்தரும் - எப்போதும்,அஃதில்லாத நல்லாடவருடன் பழகும்போது அவனுக்கு நாணத்தைப் பிறப்பிக்கும்.

ஆடவனுக்கு ஆண்மை இயல்பாதலின், அஃதின்மை இயல்பின்மை யாயிற்று. அண்ணாளன் என்றும் பெண்ணிற்கடங்கி யென்றும் பிறர் பழிப்பதாலும், அதற்கேதுவான ஆண்மையின்மை ஒருகாலும் நீங்காமையாலும், 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.

904. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெ-த லின்று.

(இ-ரை.) மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் மறுமைப்பயன் இல்லாதவனது; வினை ஆண்மை வீறு எ-தல் இன்று - வினைமுயற்சி வெற்றி பெறுவதில்லை.

இல்லறஞ் செ-தற் குரிய உரிமையின்மையின் 'மறுமையி லாளன்' என்றும், ஆண்மையின்மையின் 'வீறெ-த லின்று' என்றும் கூறினார்.

905. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று நல்லார்க்கு நல்ல செயல்.

(இ-ரை.) இல்லாளை அஞ்சுவான் - தன் மனைவிக்கு அஞ்சி நடப்ப வன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளைக்கொண்டும் நல்லவர்க்கு நல்லவை செ-ய எப்போதும் அஞ்சுவான்.

நல்லார் - அரசனொழிந்த ஐங்குரவர், சான்றோர், அருந்தவர், நல்விருந்தினர் முதலியோர். நல்லவை செ-தல் விருந்தோம்பலும் வேளாண்மை செ-தலும். விழாநாளிலும் மனைவி மகிழ்ந்திருக்கும் போதும் என்பார் 'எஞ்ஞான்றும்' என்றார்.

"இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற் புல்லாள னாக" (சீவக. 2319)

என்பது சிந்தாமணி.

"இருந்து மூகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக