பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - பெண்வழிச் சேறல்
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா ளோடோடத் தான்”
147
என்னும் பிற்காலத்து ஒளவையா ரொருவர் தனிப்பாடல் கடைப்பட்ட பெண்ணஞ்சி நிலைமையைக் குறிக்கும்.
906. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா ளமையார்தோ ளஞ்சு பவர்.
(இ-ரை) இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் மனைவியின் பசுமூங்கில் போலும் தோளிற்கு அஞ்சுபவர்; இமையாரின் வாழினும் பாடு இலரே போர்மறத்தால் விண்ணுலகடைந்த தேவர்போல் இவ் வுலகத்தில் வாழ்ந்தாராயினும் உயர்ந்தோராற் பாராட்டப்பெறும் பெருமையில்லாதவரே.
இமைகொட்டாதவர் இமையார், தேவர்க்குக் கண் இமைக்கா தென்பது
கொள்கை.
"கண்ணிமைத்த லானடிகள் காசினியிற் றோ-தலால்
---
அறிந்தாள் நளன்றன்னை யாங்கு
99
(நள. 153)
என்று நளவெண்பா கூறுதல் காண்க. தேவர்போல் வாழ்தலாவது ஆண்டகை யென்று அரசராலும் மதிக்கப்பட்டு வாழ்தல். பெண்ணிற் கஞ்சி அங்ஙனம் வாழ்தல் கூடாமையின், 'வாழினும்' என்பது எதிர்மறையும்மை. மூங்கில் பசுமையும் வழுவழுப்பும் உருட்சிதிரட்சியும்பற்றிப் பெண்டிர் தோளுக்கு உவமம். முயக்கவின்பம்பற்றித் தோள் சிறப்பித்துக் கூறப்பட்டது. இல்லாள் தோளிற் கஞ்சுதல் என்னுங் கூற்று, விண்ணுலகடையும் போர்மறவர் தம் பகைவரான மறவரின் தோள்வலிக் கஞ்சாமைக் கருத்தைக் குறிப்பா- உணர்த்திற்று. 'அமையார் தோள்' என்பது சிறிதும் அஞ்சத் தக்க தன்றென்னுங் குறிப்பினது. ஏகாரம் தேற்றம். 'ஆர்' உவமை யுருபு. பெண்ணிற்கஞ்சும் ஆடவர்க்குப் பெருமையில்லை யென்பது கருத்து.
907.
பெண்ணேவல் செ-தொழுகு மாண்மையி னாணுடைப் பெண்ணே பெருமை யுடைத்து.
(இ-ரை.) பெண் ஏவல் செ-து ஒழுகும் ஆண்மையின் நாணமின்றித் தன் மனைவிக்கு ஏவல்தொழில் செ-து வாழ்பவனின்