உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

திருக்குறள்

தமிழ் மரபுரை





ஏனெனின், அம் மணம் முற்றுவிக்கப் பெறாவிடின், அக் குடும்பம் தன் மானத்தை இழந்துவிட்டதாகக் கருதிக்கொள்ளும்." (மூன்றாம் பதிப்பு, பக். 16-17)

இதுபற்றி 17ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியர் வரைந்துள்ள அடிக்குறிப்பு

வருமாறு:

66

'அந்த அப்பர் (Abber) காலத்தில் செ-தி எவ்வாறா யிருந்திருப் பினும், இக்காலத்தில் இவ் வழக்கங்கள் இல்லை. இதுபற்றித் திரு. உலோகன் (W. Logan) தம் ‘மலைவாரக் கைப்பொத்தகம் (Manual of Malabar) என்னும் நூலிற் பின்வருமாறு வரைகின்றார்:

"மணவாதிறக்கும் பெண்டிர்க்குப் பிந்திய சிற்றீடு இத்தகைய பெயர் அது பெறத் தகுந்ததாயின் செ-தற்கு (ஐரோப்பிய மணவாழிக்கொத்த இந்துச் சின்னமாகிய) தாலி ஈமத்தின்மேற் கிடத்தப்பட்டிருக்கும் சவத்தின் கழுத்தில் முறைகாரனான ஓர் உறவினனாற் கட்டப்படும்வரை, அதை எரிக்க முடியாதென்று சொல்லப்படுகின்றது. நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக்கொள்வுகளும்பற்றி அளவிறந்து வா-வாளாமை மேற்கொள்கின்றனர். இத் தனி வியப்பான ஈம மணத்தைச் சேர்ந்த பிற கைக்கொள்வுகள்பற்றித் தமக்குச் சொல்லப்பட்டதை அப்பர் தூபாயிசு வரைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. நம்பூதிரி குமுகத் தலைமக்களையும் மலைவாரத்தில் நம்பூதிரி வழக்கங்களை நெருங்கிப் பழகியறிந்த பிறரையும் உசாவிய கவனமான உசாக்களால், அந்த அப்பர் இங்கு வரைந்திருக்கும் பழக்கத்தைப்பற்றி அவருக்குச் சொன்னவன் கூற்றை அவர் தவறாக உணர்ந் திருக்க வேண்டுமென்று எனக்குத் தெரிகின்றது. அத்தகைய நிகழ்ச்சியிற் செ-யப்படுவதென்ன வென்றால், இந்துத் திருமணங்களில் வழக்கமாகச் செ-யப்படும் மதவியற் சடங்குகளை, இறந்த பெண்ணின் உடம்பைச் சுட்டெரிக்குமுன் அதன்மிசை நிகழ்த்துவதே. இங்கு மணமென்பது திருமணச் சின்னமாகிய தாலியைக் கட்டுவதேயன்றி மணமுற்றுவிப்பு வினையன்று.”

பதிப்பாசிரியர் இங்ஙனம் மறுத்திருப்பினும், அப்பர் தூபாயிசு கூற்று வலியிழந்துவிடாது. கீழ்க்காணும் ஏதுக்குறிப்புகள் கவனிக்கத்தக்கன:

(1) இந்திய ஆரியப் பூசாரியர் முதற்காலத்தில் பல அருவருப்பான சடங்குகளை ஆற்றிவந்தமை, சென்ற நூற்றாண்டில் மார்க்கசகாய ஆச்சாரியார் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’ என்னுஞ் சுவடியினின்று தெரிய வருகின்றது.