உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - வரைவின் மகளிர்

153

(2). திருவள்ளுவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாதலால், அப் பழங் கால நம்பூதிரி வழக்கம் ஆங்கில நாகரிகம் தென்னாட்டிற் புகும்வரை தொடர்ந்திருக்கலாம்.

(3). அப்பர் தூபாயிசு தம் நூலை எழுதி முடித்த ஆண்டு (1806). அந் நூலின் 3ஆம் பதிப்பு வெளிவந்த ஆண்டு (1905) ஆதலால், பதிப் பாசிரியர் காலத்திற் பண்டை வழக்கம் நின்று போயிருக்கலாம். நம்பூதிரிக்குல முதியோர் நினைவிலிருந்திருப்பினும், இழிவுபற்றி அவரால் மறைக்கவும் மறுக்கவும்பட்டிருக்கலாம்.

(4). அப்பர் தூபாயிசு மதிநுட்பமும் உண்மையும் நடுவுநிலைமையும் உடைய துறவியராதலாலும், தென்னாடு வந்து தமிழ வாழ்வு வாழ்ந்து பதினாலாண்டு எல்லா மக்களொடும் நெருங்கிப் பழகிய பின் தம் நூலை எழுதினமையாலும், அவர் பிறன் கூற்றைப் பிறழவுணர்ந்தோ பொறுப்பற்றதனமாகவோ எழுதியிருக்க முடியாது.

(5)

(6)

முறைகாரன் தாலிகட்டற்கும் உறவினனல்லாத ஒரு பரபஞ்சை பணம் பெற்றுத் தழுவற்கும் பெரு வேறுபாடிருப்பதால், ஒன்றை யின்னொன்றாகப் பிறழவுணரவோ உணருமாறு கூறவோ முடியாது. மணமென்பது உண்மையிற் கூட்டமேயாதலால், பூப்படைந்து மணமாகாத அல்லது மணச்சடங்குமட்டும் நடந்து கூட்டம் நிகழாத பெண் இறந்தபின் அவள் ஆவியைப் பொந்திகைப்படுத்தற்குச் செ-யும் சடங்கு முதற்காலத்திற் கூட்டமாகவே யிருத்தல் வேண்டும். நாகரிகமடைந்த பிற்காலத்திலேயே, அது 'கொடும்பாவி' கட்டியிழுத்தல் போல அடையாளச் சடங்காக மாறியிருத்தல் வேண்டும். (பொந்திகை = திருப்தி(வ.).

(7) "நம்பூதிரிமார் தம் இழவுச் சடங்குகளும் கைக்கொள்வுகளும்பற்றி அளவிறந்த வா-வாளாமை மேற்கொள்கின்றனர்" என்று திரு. உலோகன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

(8)

"இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று" என்னும் திருக்குறள் உவமத்திற்கு, அப்பர் தூபாயிசு கூற்றே சிறந்த விளக்கமாகப் பொருந்துகின்றது.