உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

திருக்குறள்

தமிழ் மரபுரை

(9) பூப்படையுமுன் பெண்ணிற்கு மணஞ்செ-து வைப்பதும், மணந்த பின் மணமக்கள் கூட்டத்தைத் தள்ளிவைப்பதும், பூப்படைந்த பெண் கூட்டத்திற்குமுன் இறப்பின் அவள் சவவுடம்பின் கழுத்தில் தாலி கட்டுவதும், பண்டைத் தமிழர் வழக்கமல்ல.

(10) திருவள்ளுவர் சேரநாடு சென்றிருக்க

வேண்டுமென்பது

முன்னரே "வெள்ளத் தனைய மலர்நீட்டம்" என்னும் குறளுரை யில் (565) கூறப்பட்டது.

'தழீஇ` இன்னிசை யளபெடை.

914. பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர்.


(இ-ரை.) அருட்பொருள் ஆயும் அறிவினவர் அருளோடு கூடிய பொருளை ஆரா-ந்து ஈட்டும் அறிவினையுடையார்; பொருட் பொருளார் புல் நலம் தோயார் அறத்தையும் இன்பத்தையும் நோக்காது பொருளையே பொருளாகக் கொண்ட விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார்.

66

--

காட்சியுங் கருத்துமாகிய எல்லாப் பொருள்கட்கும் பொருள் என்பது பொதுப்பெயராதலின், 'பொருட்பொருள்' என இருபெயரொட்டாக்கினார். புன்மை தன்மையிலும் அளவிலுஞ் சிறுமை. தோ-தல் தொடுதல் அல்லது படிதல். ‘தாடோ- தடக்கை” (புறம். 14), "கானிலந் தோயாக் கடவுளை" (நாலடி. கடவுள் வாழ்த்து) என்பன காண்க. முழுகுதல் என்னும் பொருளும் உள்ள தேனும் அது இங்கு ஆழ்ந்து ஈடுபடுதலைக் குறிக்குமாதலின் விலக்கப் பட்டது. அறவழியில் ஈட்டும் பொருளை 'அருட்பொருள்' என்றும், அதற்குத் தடையாயிருத்தலால் ‘புன்னலந் தோயார்' என்றும் கூறினார்.

915.

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின் மாண்ட வறிவி னவர்.

-

(இ-ரை.) மதி நலத்தின் மாண்ட அறிவினவர் இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினை யுடையார்; பொதுநலத்தார் புல் நலம் தோயார் பொருள் கொடுத்தா ரெல்லாரும் பொது வாக நுகர்தற்குரிய விலைமகளிராற் பெறும் இழிந்த சிறிய இன்பத்திற் படியார்.

இயற்கையான மதிநலம் முற்பிறப்புகளிற் செ-த நல்வினைகளாலும் கற்ற கல்வியாலும் அமைவது. மதிநலத்தாலேயே கல்வியறிவு மாட்சிமைப்படுதலால்