174
திருக்குறள்
தமிழ் மரபுரை
174
66
திருக்குறள்
'அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
"மனநலத்தி னாகு மறுமைமற் றஃதும்
22
""
"மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல்"
தமிழ் மரபுரை
(368)
(495)
(556)
66
'கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலார்"
(572)
""
"கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேல்
(575)
'உடைய ரெனப்படுவ தூக்கமஃதில்லார்"
(591)
“உரமொருவற் குள்ள வெறுக்கையஃதில்லார்”
(600)
என்னு மிடங்களிலெல்லாம் ஆ-தம் அரைமாத்திரையே கொண்டிருத் தலையும் நோக்குக. இக் குறளால் அளவறிந் துண்ண வேண்டுமென்பது கூறப்பட்டது.
944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
து-க்க துவரப் பசித்து.
(இ-ரை.) அற்றது அறிந்து - முன்னுண்டது செரித்த நிலைமையை அறிந்து; துவரப் பசித்து - முற்றப் பசித்தபின்; மாறு அல்ல கடைப்பிடித்துத் துக்க உடற்கூறு பருவம் விருப்பம் காலம் இடம் முதலியவற்றொடு மாறுகொள்ளாதனவும், மணஞ்சுவை வலிமைகளால் மாறுகொள்ளாதனவு மான உணவுகளைக் குறிக்கொண்டு உண்க.
'அற்றது போற்றி' (942) என்றும், 'அற்றா லளவறிந்து' (943) என்றும், முன்பு இருமுறை கூறியதோ டமையாது மீண்டும் இங்கு 'அற்ற தறிந்து’ என்றது, செரிமானத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தற் பொருட்டாம். ஆசிரியர் இதை முதன்மையாகக் கொண்டதினாலேயே, இன்பத்துப்பாலில் உலகிற் சிறந்த இன்பத்தைக் கூறுமிடத்தும்,
“உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது”
(1326)
என உவமமாகக் கூறியிருத்தல் காண்க. உண்டது செரித்த பின்பும் அதன் சுவையும் மணமும் சற்று நேரம் நிற்குமாதலின், 'துவரப் பசித்து' என்றார். பசித்தல் என்னுஞ் சினைவினை இங்கு முதல் வினையாக நின்றது. ஊதை பித்த கோழைகளை மிகுப்பனவும் குறைப்பனவுமாக உணவுகள் உடற் கூற்றொடும், இளமைக்குரிய வுணவுகளை முதுமையி லுண்பது பருவத் தொடும், அருவருப்பான தோற்றமும் நாற்றமுமுள்ள வுணவுகள் விருப்பத்