உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) மருந்து

-

175

தொடும், கோடைக்குரிய வுணவை மாரிநாளிலும் காலைக்குரிய வுணவை மாலையிலும் உண்பது பெரும்பொழுதும் சிறுபொழுதுமான காலத்தொடும், வெப்பநாட்டிற்குரிய வுணவைக் குளிர்நாட்டிலுண்பது இடத்தொடும்,

மாறுகொள்வனவாம். தேனும் நெ-யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வன சுவை வலிமைகளால் மாறுகொள்வனவாம்.

அறுசுவைகளுள், துவர்ப்பையும் புளிப்பையும் ஊதைக் கூற்றோடும், உவர்ப்பையும் கைப்பையும் பித்தக் கூற்றோடும், இனிப்பையும் கார்ப்பையும் கோழைக் கூற்றோடும், தொடர்புபடுத்திக் கூறுவர் மருத்துவர். ஒரே சுவை யுள்ள கா-கனிகள் நேர்மாறான குணஞ் செ-வதாலும், ஒரே கனி வேறுபட்ட வளர்ச்சி நிலையிலும் வேறுபட்ட நிலத்தாலும் வேறுபட்ட காலத்தாலும் சுவை வேறுபடுதலாலும், சுவையை மட்டும் நோக்காது பொருளையும் நோக்கி, ஏற்பதும் ஏற்காததும் அறிந்துகொள்வதுந் தள்ளுவதுஞ் செ-தல் வேண்டும். அயலிடங் களில் உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளும் உணவுகளை உண்ண நேரினும், அவற்றிற்குரிய மாற்றுகளை உடனே உண்டு விடுவது நோ- வராமல் தடுக்கும் முற்காப்பாம். ஒவ்வோருணவுப் பொருளிலும் சிற்றள வாகவோ பேரளவாகவோ ஒவ்வொரு குற்றமிருந் தாலும், ஒருவருடற் கொத்தது இன்னொருவ ருடற்கொவ்வாமையாலும், பித்தத்தையுங் கா-ச் சலையும் நீக்கினும் தாது வளர்ச்சியைக் குறைக்கும் இஞ்சி சுக்குப் போல ஒன்றிற்காவது ன்னொன்றிற் காகாமையானும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாதலாலும், எல்லாவற்றின் இயல்பையும் உரையளவையால் அல்லது பட்டறி வாலறிந்து, எல்லா நிலைமைக்கும் ஏற்ப உடம்பிற்கொத்த வுணவை அளவாக வுண்டு நோயின்றி இன்புறுக என்பார். 'கடைப்பிடித்து மாறல்ல து-க்க' என்றார். இக் குறளால் ஒத்த வுணவை நன்றா-ப் பசித்த பின்னரே யுண்ணவேண்டுமென்பது கூறப்பட்டது.

945. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி னூறுபா டில்லை யுயிர்க்கு.

(இ-ரை.) மாறுபாடு இல்லாத உண்டி

மாறுகொள்ளாத உணவை; மறுத்து உண்ணின்

உடற்கூறு முதலியவற்றோடு ஒருவன் தன் விருப்பத் திற்கு

இடங்கொடாது மேலும் இரு கவளத்திற்கு வயிற்றில் இடமிருக்கு மளவு குறைத்து

உண்பானாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை துன்பமுறுதல் இராது.

-

அவனுயிர்க்கு நோயினால்