உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

திருக்குறள்

தமிழ் மரபுரை





செரிமானத்தைப் போன்றே ஒத்த வுணவை யுண்பதும் இன்றியமை யாததாதலின், 'மாறல்ல' என்று மேற்கூறியதையே இங்கு 'மாறுபா டில்லாத வுண்டி' என்று வழிமொழிந்தார். மறுத்தலென்பது நிரம்ப வுண்ணவேண்டு மென்னும் ஆசைக்கிணங்காமை. 'உண்ணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது. 943ஆம் குறளில் ‘அளவறிந் துண்ணுக` என்றதனை இங்கு ‘மறுத்துண்க' என வரையறுத்தார். ஊறு என்பது நேர்ச்சி. அது இங்கு வழக்குப் பற்றித் துன்பநேர்ச்சியைக் குறித்தது. இங்குக் குறித்த துன்பம் நோ-. உறுவது ஊறு; படுவது பாடு என்பது போல. துன்பமுறுவது உயிரேயாதலின் அதன்மேல் வைத்துக் கூறப்பட்டது. ஒத்த வுணவையும் ஒருசிறிது குறைத்துண்டல் நன்றென்பதாம்.

946. இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங் கழிபே ரிரையான்க ணோ-.

(இ-ரை.) இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் குறைத்துண் பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம் முறையை நெடுகலும் கடைப் பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பது போல்; கழிபெரு இரையான்கண் நோ- நிற்கும் - மிகப் பேரளவாக வுண்பவனிடத்து நோ- நிலைத்து நிற்கும்.

இழிவென்றது இன்றியமையாத அளவிற்கு மேற்பட்டதின் நீக்கத் தையே. இன்பமாவது உணவுச்சுவை மிகுதலும், எளிதா யியங்கி வினை செ-தலும், ஊதை பித்த கோழைகள் தத்தம் அளவில் நிற்றலால் ஒருவகை நோயுமின்மையும், ஏனை யின்பங்களையும் நுகர்தலும், மனமகிழ்ச்சியுமாம். 'கழிபெரு' மீமிசைச் சொல். 'இரை' யென்பது விலங்கினுந் தாழ்ந்த பறவை யூரிகளின் உணவைக் குறிக்குஞ் சொல்லாதலால், இங்கு இழிவு குறித்து நின்றது. 'கழிபே ரிரையான்' என்பதை மிடாவிழுங்கி என்பதுபோலக் கொள்க. 'நோ-' வகுப்பொருமை. அளவூணின் நன்மையும் மிகையூணின் தீமையும் இங்கு ஒருங்கு கூறப்பட்டன. மிகையூண் என்பது அளவு மிகுதியையன்றி வேளை மிகுதியையுங் குறிக்கும்.

66

'ஒருபொழு துண்பானே ஓகியொரு நாளில்

இருபொழு துண்பான்நன் றாகி - வருபொழுது முப்பொழு துண்பானேல் நோகியாம் நாற்பொழுது கப்புவான் சாகி கடிது.

""