உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




-

பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) மருந்து

947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி னோயள வின்றிப் படும்.

177

(இ-ரை.) தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - ஒருவன் தன் உடற்கூற்றையும் அதற்கேற்ற வுணவையும் அதை யுண்ணுங் காலத் தையும் அறியாது, தான் விரும்பிய வுணவுகளையெல்லாம் விரும்பிய பொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்றலுக்கு மேற் பட்டுப் பேரளவாக உண்பானாயின்; நோ- அளவு இன்றிப் படும் - அவ னிடத்துப் பல்வகை நோயும் தோன்றி வளரும்.

தெரியாமை வினைக்குச் செயப்படுபொருள்கள் மேற்குறள்களிற் கூறப்பட்டவை. பசியெடுத்தல் தீயெரிதல் போன்றும் உண்டது செரித்தல் தீயால் எரிக்கப்படுதல் போன்றும் இருத்தலால், பசி அல்லது செரிமான ஆற்றல் வயிற்றுத்தீ யெனப்படும். அவ் வழக்கு நோக்கித் 'தீயள வன்றி’ என்றார். 'வயிற்றுத் தீத்தணிய' என்பதுங் காண்க..

66

'கனல்வாதை வந்தெ-தின்” (தாயு. சச்சிதா. 5) என்று தாயுமானவரும் கூறுதல் காண்க. 'நோ-' வகுப்பொருமை. இக் குறளால் செரிமான ஆற்றலளவிற்குத் தக்கவாறு உண்ணவேண்டு மென்பது கூறப்பட்டது. 'தெரியான்' எதிர்மறை முற்றெச்சம்.

948.

நோ-நாடி நோ-முதல் நாடி யதுதணிக்கும் வா-நாடி வா-ப்பச் செயல்.

-

நோ-நாடி மருத்துவன் நோயாளியின் சொல்லினாலும் நாடியினா லும் பிற வுடற்குறிகளாலும் சிறுநீர் கழிபொருள்களின் இயல்பினாலும் நோ- இன்னதென்று ஆ-ந்து துணிந்து; நோ- முதல் நாடி

பின்பு அது உண்டான கரணியத்தை ஆரா-ந்தறிந்து; அது தணிக்கும் வா நாடி - அதன் பின் அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆ-ந்துகொண்டு; வா-ப்பச் செயல் வெற்றியாக நிறைவேறுமாறு கையாள்க.

அது

இவ் வதிகாரத்தின் முதற்குறளில் மூவகை உடற்கூறும்பற்றிய நோ-கள் உண்டாகும் வகையைப் பொதுப்படச் சொல்லி, அதன் பின் உணவுவகையில் நோ- வராமல் தடுக்கும் முற்காப்பை ஆறு குறள்களாற் கூறி, பின்பு எஞ்சிய முக்குறள்களில், உணவுத் தவற்றாலும் பிற வகையாலும் நோ- வந்தவிடத்து மருத்துவன் செ-யும் பண்டுவ முறையைப்பற்றிக் கூறுகின்றார்.