உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

திருக்குறள்

தமிழ் மரபுரை





சித்த மருத்துவத்தில் நோ- நாடும் சிறந்த முறை நாடி பார்த்தலே. அது தமிழராலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடத்தினின்றே ஆரிய மருத்து வரும் ஏனை மருத்துவரும் அதைக் கற்றுக்கொண்டனர். அதை இங்கு வெளிப்படையாகக் கூறாவிடினும் 'நோ- நாடி', 'நோ- முதல் நாடி', 'வா-நாடி' என்று மும்முறை 'நாடி' என்னுஞ் சொல்லை ஆள்வதால் முந்நாடியும் குறிப்பாக வுணர்த்தினர் என்றே கொள்ளல் வேண்டும். இது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்திவகையாம். நாடி பேசும் வேளையும் நேரமும் வருமாறு:

நாடி

வேளை

நேரம்

ஊதை (வளி)

பகலும் இரவும் 6-10 மணி

பித்தம்

பகலும் இரவும் 10-2 மணி

கோழை (ஐ)

பகலும் இரவும் 2-6 மணி

இம் மூன்றும் இம் முறையில் நடப்பதனாலேயே "வளிமுதலா எண்ணிய மூன்று" என்றார் ஆசிரியர். இவற்றின் ஒப்புநோக்கிய அளவு முறையே ஒன்றும் அரையும் காலும் ஆகும்.

மேலை மருத்துவம் நூற்கல்வியாலும் கருவித் துணைகொண்டும் செ-யப்படுவதால், அது பலராலும் பயிலப்படும். நாடி பார்த்தல் தெ-வத் தன்மையான நுண்ணருங் கலையாதலால், சித்த மருத்துவம் அதற்கென்று இறைவனால் படைக்கப்பெற்ற ஒருசிலராலேயே பயிலப்படும் என வேறு பாடறிக.

நோ-க்கரணியம் உணவு, உடை, செயல், தொழில், வாழ்நிலம், வானிலை (weather), நச்சுக்கடி முதலியனவாகப் பலவகைப்படும். அவற்றை ஆ-வதால் நோயும் அதை நீக்கும் வாயும் அறியப்படும். நோ- நீக்கும் வகைகள் உண்பித்தல், முகர்வித்தல், பூசுவித்தல், அணிவித்தல், குளிப்பித்தல், அரத்தங் களைதல், அறுத்தல், சுடுதல், நம்பக முறுத்துதல், ஆசை தீர்த்தல் முதலி யனவாகப் பல திறத்தன. மருத்துவப் பண்டுவத்தோடு அறுவைப் பண்டுவமும் தமிழ மருத்துவத்திலுண்மை, கண்ணப்ப நாயனார் காளத்தி நம்பி படிமைக்குக் கண்ணிடந் தப்பியதினாலும்,

“உடலிடைத் தோன்றிற் றொன்றை யறுத்தத னுதிர மூற்றிச் சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்”

(கம்பரா. கும்ப. 149)