உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - மருந்து

“ஆரார் தலைவணங்கார் ஆரார்தாம் கையெடார் ஆரார்தாம் சத்திரத்தில் ஆறாதார் - சீராரும் தென்புலியூர் மேவும் சிவனருள்சேர் அம்பட்டத்

தம்பிபுகான் வாசலிலே தான்.'

""

"கருவியிட் டாற்றுவார் - புண்வைத்து மூடார் பொதிந்து.

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

179

(கம்பர் தனிப்பாடல்)

(நீதிநெறி. 55)

மாளாத காதல் நோயா ளன்போல்'

22

(திவ். 5:4)

"

என்பனவற்றாலும் அறியப்படும்."ஊனுக்கு ஊனிடுக” என்னும் மருத்துவ நெறிமுறையால், பண்டைத் தமிழ் மருத்துவத்தில் ஒட்டறுவை (plastic sur- gery) இருந்தமையும் அறியப்படும்.

உணவுவகைபற்றித் தமிழ மருத்துவம் மரக்கறி மருத்துவமும் புலால் மருத்துவமும் என இருதிறப்படுமேனும், திருவள்ளுவர் தழுவியது மரக்கறி மருத்துவமே. புலாலுணவில் மரக்கறியுணவுங் கலந்திருத்தல்போல், புலால் மருத்துவத்தில் மரக்கறி மருத்துவமுங் கலந்துள்ளதென்பதை அறிதல் வேண்டும்.

வனை

நம்பக மருத்துவம் (faith cure) மந்திரித்தல், குழையடித்தல், மந்திரம் போல் ஏதேனுமொரு சொல்லை வா-க்குட் பன்முறை சொல்லுதல், இறை வேண்டல், ஏதேனுமொன்றை உண்பித்தல், ஏதேனுமொன்றைப் பூசுதல் அல்லது அணிவித்தல், ஏதேனுமொன்றைச் சொல்வித்தல் அல்லது நினைப்பித்தல், ஏதேனுமொன்றைச் செ-வித்தல், ஏதேனுமோரிடத்திற்குச் செல்வித்தல், ஏதேனுமொரு பொருளைக் காணச் செ-தல் முதலிய பல்வேறு வழிகளால் நோயாளிக்கு நோ- நீங்கிவிடுமென்னும் நம்பிக்கை யூட்டுதலாம்.

"மணிமந்திர மாதியாம் வேண்டுசித் திகளுலக

மார்க்கத்தில் வைக்க விலையோ'

என்றார் தாயுமான அடிகளும்.

""

நோ-களெல்லாம் உடல்நோ-, உளநோ- என இருபாற்படும். தீவினைக் கேதுவான தீய வுள்ளமல்லாத தூய வுள்ளநிலையில் நேரக்கூடிய உள நோ-களுள், சூடு முற்றிய பித்தத்தினாலும் அளவிற்கு மிஞ்சிய மூளை யுழைப்பினாலும் அளவிறந்த காதலாலும் உண்டாகும் கோட்டி அல்லது கிறுக்கு என்னும் பித்தியம், மருத்துவத்தினால் நீக்கப்படும்; ஆயின், பெற்ற