உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறர்க்கு மேலும்மேலுங் கேட்க விருப்ப முண்டாகுமாறு எதையும் இன்பமாக எடுத்துக்கூறும் ஆற்றல், எல்லார்க்கும் இயற்கையாகவோ செயற்கையாகவோ அமையாமையானும், பிறர் சொல்வதன் பொருளை உணர்ந்துகொள்வதே தம் கருமவெற்றிக்கு வேண்டியதாதலானும், "வேட்ப... கோள்" என்றார்.

647. சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது.

(இ-ரை.) சொலல் வல்லன் – தான் சொல்லக் கருதியவற்றைப் பிறர்க்கேற்பச் சொல்லுதல் வல்லவனா; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயினும் எதையும் மறந்து விட்டுவிடாதவனா; அஞ்சான் அவனை – அவைக்கு அஞ்சாதவனாயிருப்பவனை; இகல் வெல்லல் யார்க்கும் அரிது தருக்கத்திலும் மாறுபாட்டிலும் வெல்லுதல் எவருக்கும் அரியதாம்.

ஏற்பச் சொல்லுதலாவது, கேட்பார்க்கு நன்மையல்லாவிடினும் மறுக்காது ஒத்துக்கொள்ளுமாறு சொல்லுதல். சோர்வுபடச் சொல்லுவதில் முறை பிறழச் சொல்லுதலும் தனக்குக் கேடாகச் சொல்லுதலும் அடங்கும். மாறு பாட்டில் வெல்லுதல், பிரித்தல் பொருத்தல் முதலிய வலக்காரங்களால் (தந் திரங்களால்) மேற்கொள்ளுதல். தருக்கம் சொல்லும், மாறுபாடு செயலும் ஆகும்.

648.விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(இ-ரை.) நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் - சொல்ல வேண்டிய செ-திகளை ஒழுங்கான வரிசைப்படுத்தி இனிதாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால்; ஞாலம் விரைந்து தொழில் கேட்கும் – உலகம் விரைந்து அவர் ஏவல்கேட்டு நடக்கும்.

தொழில்கேட்டல் என்பது இப் பொருள தாதலை,

"தொன்று மொழிந்து தொழில் கேட்ப”

(மதுரைக்.72)

என்பதனால் அறிக. 'ஞாலம்' இடவாகுபெயர். நிரத்தல் முன்பின் முறை தவறாது அமைத்தல். 'பெறின்' என்பது சொல்வன்மையாளரின் அருமை யுணர்த்தி நின்றது.

"ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்