உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (குடி) - நன்றியில் செல்வம்

209

இரண்டும் அருகிலிருந்தும் பயனில்லை யென்பதாம். 'நடுவூர்' என்பது 'புறநகர்' என்பது போன்ற இலக்கணப் போலி.

1009.

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய

வொண்பொருள் கொள்வார் பிறர்.

(இ-ரை.) அன்பு ஒரீஇ

-

ஒருவன் தன் கஞ்சத்தனத்தினால், உறவின ரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெ-தலை யொழிந்து; தற்செற்று தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து; அறம் நோக்காது வறி யார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செ-யாது; ஈட்டிய ஒண்பொருள் பிறர் கொள்வார் வருந்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வருங் கொள் ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

-

'ஈட்டிய' என்பதால் சிறிது சிறிதாக நீண்ட காலம் வருந்தித் தொகுத்த தென்பதும், ஒண்பொருள் என்பதால் நன்றா-ப் பயன்படக்கூடிய தென்பதும், 'பிறர்' என்பதால் சிறிதும் தொடர்பற்றவ ரென்பதும் பெறப்படும். 'ஒரீஇ' இன்னிசை யளபெடை.

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்

(6060m. 4)

என்று இரட்டுறலாகக் கூறினார் ஔவையார். ஈயார் = ஈயாதவர், ஈக்கள். தேட்டு தேடிய சொத்து, தேன். தீயார் = கொடியவர், தீப்பந்தத்தை யுடைய குறவர்.

1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து.

=

(இ-ரை) சீர் உடைச் செல்வர் சிறுதுனி - ஈகையாற் புகழ் பெற்ற செல்வர் குறுங்கால வறுமை யடைதல்; மாரி வறம் கூர்ந்த அனையது உடைத்து - உலகத்தை வழங்கிவரச் செ-வதாகிய முகில் (மேகம்) சிற்றிடைக்காலம் பெ-யாது வறட்சி மிகுந்தாற்போன்ற தன்மை யுடையது.

எல்லார்க்கும் இல்லையென்னாது வழங்கும் செல்வர் அதனால் வறுமையடைந்த பின்பும், சிறிது காலம் பொறுத்தது மீண்டுஞ் செல்வராகி முன்போற் பயன்படுவ ரென்பது உவமத்தாற் பெறப்பட்டது. இதனால், நன்றியில் செல்வம் இடையறாதிருந்தும் எக்காலும் பயன்படாதென்பதும் எதிர்மறை யளவையாற் பெறப்பட்டதாம். "இதற்குச் சீருடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை யுடைத்தென, அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும் ஓர்