உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

திருக்குறள்

தமிழ் மரபுரை





தோற்றம் உண்டாம் -அப் பொருளைக் கொடுப்பார்க்கு என்ன புகழுண் டாம்? ஒன்றுமில்லையே!

கொள்வாரின்றிக் கொடுப்பாரில்லை. இரப்பாரின்றி ஈவாரில்லை. ஈகையின்றிப் புகழில்லை. ஆதலால், ஈவாரின் புகழுக்கு இரப்பாரே கரணியம் என்பதாம். 'தோற்றம்' ஆகுபொருளது, 'மேதல்' வினை உலக வழக்கில் மேவுதல் என வழங்கும். 'இலாஅ' இசைநிறை யளபெடை. இவ் விரு குறளாலும் மக்கட் பண்பு வெளிப்பாட்டிற்கு இரப்பாரின் இன்றியமையாமை கூறப்பட்டது.

1060. இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி.

(இ-ரை.) இரப்பான் வெகுளாமை வேண்டும் - இரக்கப்பட்டவன் இரந்த பொருளை ஈயாதவிடத்து இரந்தவன் சினங்கொள்ளாதிருத்தல் வேண்டும்; நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி - முற்பிறப்பில் தானும் தன்னை இரந் தார்க்கு ஈயவில்லை என்பதற்குத் தன் வறுமைத் துன்பமே போதிய சான்றாம்.

தான் அளந்த அளவே தனக்கும்; ஆதலாற் சினத்திற் கிடமில்லை யென்பது கருத்து. ஈயாத கஞ்சர் செல்வத்தைக் கள்வர் கவர்வதால் அவர் வறுமையடைவதும், அறநூற் கூற்றும், பிற சான்றுகளாம்.

"ஏதிலார் குற்றம்போற் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு’

(குறள்.190)

என்பதாம். ஏகாரம் பிரிநிலை; உம்மை எச்சவும்மை. கரி = சான்று(evidence), சான்றாளன்(witness).

அதி. 107 இரவச்சம்

-

அதாவது, உழைக்கக் கூடியவர் மானந்தீர வரும் இரப்பிற்கு அஞ்சுதல் வேண்டியதாதல். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.

1061. கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும்.

(இ-ரை.) கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை தம்மிடமுள்ளதை ஒளிக்காது, அரும்பெற லுறவினர் வந்தாரே யென்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை