உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (குடி) - இரவச்சம்

-

235

கூர்ந்திறத்தல்; கோடி உறும்

-

அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும்

செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம்.

மானங் கெட இரந்துண்பதினும், அது கெடாது இயன்றவரை யுழைத்து வறுமையிற் செம்மையா- வாழ்தலும் அது இயலாவிடத்து உயிர் துறத்தலும் மேல் என்பதாம். உம்மை உயர்வுசிறப்பு. 'கோடி' ஆகுபொருளது. இக் குறளால் இரத்தலின் இழிவு கூறப்பட்டது.

1062. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து

கெடுக வுலகியற்றி யான்.

(இ-ரை.) உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ் வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்வார்க்கு உழைத்துயிர் வாழ்தலேயன்றி இரந்துயிர் வாழ்தலையும் விரும்பி வகுத்தானாயின்; பரந்து கெடுக அக் கொடியோனும் அவரைப்போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக.

அக்காலத்தில் மக்கள்தொகை மிகாது நிலவளமும் நீர்வளமும் மிக்கு எவருக்கும் அவர் விரும்பிய வேலைவா-ப்பு எப்போதும் இருந்ததனால், உழைக்க விருப்பமுள்ள யாரும் வறுமையால் வாடவோ இரந்துண்ணவோ எள்ளளவும் ஏதுவில்லை. ஆயினும், சில மானமில்லாச் சோம்பேறிகள் “இது எம் தலையெழுத்து” என்றும், “அன்றெழுதினவன் அழித்தெழுதான்” என்றும் சொல்லிக்கொண்டு இரப்பு வாழ்க்கையை மேற்கொண்டு, பாராத இடங்களைப் பார்த்தும் கிடையாத வுணவுகளை யுண்டும் அங்குமிங்குந் திரிந்தனர். அவரை நோக்கியே இது ஆசிரியர் கூறியதாகும். ஊணும் உடை யும் ஏராளமா யிருந்ததனால், பெரும்பாலும் "பாழாப் போகிறது பசுவின் வாயிலே" என்ற முறையிலேயே அக்காலத்து இரப்போர்க்கு அவ் விரண்டும் அளிக்கப்பட்டன. ஆதலால், பொருளாட்சித் துறைப்படி மாபெருங் கேடாம். அதனாலேயே ஆசிரியர் அதை அச் சோம்பேறிகள் கூற்றை யொப்புக் கொள்வது போல், இறைவன்மேல் வைத்து வன்மையா-க் கண்டித்தார். 'வேண்டின்' என்பது வேண்டாமையைத் தெளிவாகக் காட்டி நின்றது. உம்மை இழிவுசிறப்பு.

மக்கள்தொகையும் வளக்குறைவும் பொருள்முடையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிக்க இக்காலத்தும், உடம்பாலும் உள்ளத்தாலும் உழைக்க விரும்பும் ஒருவனுக்குப் பொருள்பெறும் வேலை வா-ப்பில்லையெனின், அது நாட்டையாளும் அரசின் குற்றமேயன்றி இறைவன் ஏற்பாடன்று.