236
திருக்குறள்
தமிழ் மரபுரை
"பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை'
55
(குறள்.322)
என்று ஆசிரியர் அக்காலத்தே கூறிப் போந்தமை காண்க. இக் குறளால் இரவு இறைவன் ஏற்பாடன்மை கூறப்பட்டது.
1063. இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில்.
(இ-ரை.) இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் வறுமைத் துன்பத்தை உழைப்பால் நீக்குவோமென்று கருதாது இரப்பால் க்குவோமென்று கருதும் வன்மையைப் போல்; வன்பாட்டது வன்மைப்பாடுள்ளது வேறொன்றுமில்லை.
ல்
-
-
முதலாவது பிறரிடம் ஒன்று ஏற்பதே இகழ்ச்சி; அதையும் இரந்து பெறுதலோ மிக இழிந்தது. மதிப்பாக வுழைத்து மானத்தோடு வாழ இறைவன் கைகால் முதலிய உறுப்புகளைத் தந்திருக்கவும். அவற்றைப் பயன்படுத்தாது இரத்தலை மேற்கொண்டு ஒரே இல்லத்திற் பெறாது தெருத்தெருவாகவும் வீடுவீடாகவும் சென்று, சிறிது சிறிதாகவும் ஒன்றோடொன் றொவ்வாது பல்வேறு வகைப்பட்டனவாகவும், புதியனவும் பழையனவும் சுவை யுள்ளனவும் இல்லனவுமாகவும், சில மனைகளில் மறுக்கப்பட்டும் சில மனை வெறுக்கப்பட்டும், தொல்லைப்பட்டு மானங்கெட்டுத் தொகுத்த மிச்சிலும் எச்சிலுமான வுணவையுண்டு உடம்பு தாங்கி, நா-போல் திரிய மனங்கொள்வது ஆறறிவு படைத்த மாந்தப் பிறப்பிற்கு எவ்வகையிலும் ஏற்காத மாபெரு வன்செயலாதலின், 'வன்மையின் வன்பாட்ட தில்' என்றார். இதனால் வறுமை நீக்கும் வழி இரவன்றென்பது கூறப்பட்டது.
1064. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு.
களில்
ஒருசிறிதும்
(இ-ரை.) இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு பொருளில்லாக் காலத்தும் பிறரிடம் சென்று இரத்தலை யுடம்படாத குண நிறைவு;
ம்
இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே
—
உலகங்களெல்லாம் அவற்றில்
இட்டுவைக்கும் இடமெல்லாங் கொள்ளாத பெருமையை யுடையதாம்.
மானமும் பெருமையும் நாணும் சால்பின் உறுப்புகளாதலின், அவை இரவை அறவே தடுக்குமென்பதாம். இடம் உலகில் வாழ இடந்தருஞ் செல்