பொருட்பால் - உறுப்பியல் (குடி) - இரவச்சம்
ம்
237
வம். இடம் - இடன், கடைப்போலி. “இடனில் பருவத்தும்” (குறள். 218) என்றமை காண்க. ஏகாரம் தேற்றம், உம்மை இழிவுசிறப்பு.
1065. தெண்ணீ ரடுபுற்கை யாயினும் தாடந்த
துண்ணலி னூங்கினிய தில்.
-
தெளிந்த நீர்போல் தெடு
(இ-ரை.) தெள்நீர் அடு புற்கை யாயினும் தெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும்; தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல் - தன் உழைப்பினால் வந்த வுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை.
நொந்து சுமந்து பெற்ற பிள்ளை காக்கைக் குஞ்சுபோற் கருத்திருப் பினும், தா-க்குத் தன்பிள்ளை நன்பிள்ளை யாதல்போல, உழைப்பாளிக்குத் தான் வருந்தியுழைத்த வுழைப்பால் வந்த வுணவு, கேழ்வரகு மாவினாற் கா-ச்சிய தெண்கூழாயினும் தேவரமுதாம். உம்மை இழிவுசிறப்பு.
1066. ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிளிவந்த தில்.
வேட்கை தணிக்கத் தண்
(இ-ரை.) ஆவிற்கு நீர் என்று இரப்பினும் ணீரின்றி இறக்கும் நிலைமையிலுள்ள ஓர் ஆவினுக்காக, ஒருவன் தண்ணீர் தருகவென்று அறம் நோக்கி யிரந்து கேட்கும் போதும்; நாவிற்கு இரவின் இளிவந்தது இல் - அவன் நாவிற்கு அவ் விரவைப் போல இழிவு தருவது வேறொன்றுமில்லை.
உணவை விளைக்கும் உழவுத்தொழிற்கு இன்றியமையாத துணை யாகிய காளையும், தா-ப்பாலில்லாத குழந்தையின் உயிர்வாழ்க்கைக்கு ன்றியமையாத பாலுதவும் ஆவும், தொன்றுதொட்டுத் தமிழரால் மக்களைப் போற் பேணப்பட்டு வந்துள்ளன. இதற்கு, சாத்தன் சாத்தி, கொற்றன் கொற்றி, மருதன் மருதி என்னும் மக்கள் பெயர் அவற்றிற்கு இடப்பட்டு வந்ததே போதிய சான்றாம். வெட்சித் துறையான ஆதந்தோம்பலும் (தொல். 1003) இதற்குச் சான்று பகரும். பொதுவாகப் பெண்பால் மென்பாலாதலாலும், அஃறிணையுள் ஆவானது அமைதிக்குச் சிறந்தமையாலும் பிறவினத்தினுந் தூமையா யிருப்பதனாலும், ஆவைக் காப்பது பேரறம் என்னும் கொள்கை யெழுந்தது. ஆயினும், அதன்பொருட்டும் இரப்பது இழிவென்பது தோன்ற 'ஆவிற்கு என்றும். இரக்கும் பொருள் விலைகொடுத்துப் பெற வேண்டாத எளிமைய தாகலின் 'நீர்' என்றும், இரக்குஞ் செயல் அதனைச் செ-யும் உறுப்பிற்கும் இழிவென்பதுபட 'நாவிற்கு’