உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

திருக்குறள்

தமிழ் மரபுரை





என்றும், இழிவுகட்குள் தலைமையான தாதலின் இளிவந்த தில்' என்றும் கூறினார். இதனால் அறத்தின்பொருட்டும் இரத்தல் இழிவென்பது கூறப்பட்டது. இக் கொள்கை இன்று முற்றுந் தளர்ந்துள்ளது.

1067. இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற் கரப்பா ரிரவன்மி னென்று.

-

(இ-ரை) இரப்பின் இன்றியமையாமைபற்றி இரக்க நேரின்; கரப்பார் இரவன்மின் என்று தம்மிட முள்ளதை யில்லை யென்று ஒளிப்பாரைமட்டும் இரக்கவே வேண்டாவென்று; இரப்பாரை எல்லாம் இரப்பன் இவ் வுலகில் இரப்பாரை யெல்லாம் நான் இரந்து வேண்டிக்கொள்கின்றேன்.

இது ஆசிரியர் கூற்று. இதனால் மேற்கூறிய நெறியின் கடுமையைத் தளர்த்தித் தம்மை நடைமுறைக்கேற்ற வழிகாட்டியாகக் காட்டியுள்ளார். 'கரப்பா ரிரவன்மின்` செ-யுள் நடைபற்றிய இரண்டாம் வேற்றுமைத் தொகை. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலை அணி. இதனால் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.

1068. இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

-

(இ-ரை.) இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி வறுமையென்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத தோணி; கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும் வழியிலுள்ள கரத்தல் என்னும் பாறையால் தாக்கப்படும்போது பிளந்துபோம்.

-

உழைப்பாற் கடக்கவேண்டிய கடலை இரப்பாற் கடக்கத் தொடங்கிய வன், சேதமின்றித் தன் தோணியைச் செலுத்த முடியாமையால், 'ஏமாப்பி றோணி' என்றார். இது வறுமையென்னுங் கடலைப்பற்றிக் கூறாது அக் கடலி லுள்ள தோணியையும் பாறையையுமே கூறியதனால் சினையுருவகம்.

1069. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள

வுள்ளதூஉ மின்றிக் கெடும்.

(இ-ரை.) இரவு உள்ள உள்ளம் உருகும் செல்வ முண்மை யின்மை யால் வேறுபட்டிருப்பினும், மாந்தப் பிறப்பினாலும் உடலுறுப் பமைதியி னாலும் முற்றும் ஒத்திருக்கும் இருவருள், ஒருவன் இன்னொருவன் முன் சென்று நின்று.