பொருட்பால் உறுப்பியல் (குடி) - இரவச்சம்
"பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச் சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி மல்லெலாம் அகல வோட்டி மானமென் பதனை வீட்டி’
22
—
239
இரக்கும் நிலையின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளமெல்லாம் நீரா- உருகியோடும்; கரவு உள்ள உள்ளதும் இன்றிக் கெடும் இனி, இரக் கப்பட்டவன் அந் நிலையைக் கண்ணாரக் கண்டும் இல்லையென்று மறுத் தலின் கொடுமையை நினைந்தாலோ, அவ் வுருகுநிலைதானும் இல்லாது முற்றும் இறந்துபோம்.
66
இது சான்றோரான கண்டார் கூற்று.
'கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை
உள்ளுங்கா லுள்ள முருகுமா லென்கொலோ
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு.”
(நாலடி.305)
இரவு கொடிது; கரவு அதனினுங் கொடிது என்பதாம். உம்மை எச்சம். 'உள்ளதூஉம்' இன்னிசை யளபெடை.
1070.
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ விரப்பவர் சொல்லாடப் போஒ முயிர்.
-
(இ-ரை.) சொல்லாட இரப்பவர் உயிர் போம் கரப்பவர் இல்லை யென்று சொல்லிய அளவிலேயே இரப்பவர்க்கு உயிர் போ-விடும்; கரப் பவர்க்கு யாங்கு ஒளிக்குங்கொல் -இனி, அவ் வில்லை யென்னுஞ் சொல் லையே வா-திறந்து சொன்னவர்க்கு அதனால் உயிர் போகாமலிருப்பதால், அது எப்புரைக்குட் புகுந்து ஒளிந்து நிற்குமோ! அறிகிலம்.
கேட்டாரைக் கொல்லவல்லதாகிய சொல் சொல்வாரைக் கொல்லுதல் எளிதேனும், அங்ஙனஞ் செ-யாதிருத்தல் மருட்சியைத் தருகின்றது என் பதாம். இரப்பார்க்கு உயிர்போதலாவது, இனி என் செ-வேமென் றேங்கிச் செயலறும் மனநிலை.
"புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன் நல்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயா- எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே மாயானோ மாற்றி விடின்.”
(நாலடி.308)