56
திருக்குறள்
தமிழ் மரபுரை
கேடருமை யென்பது 'அருங்கேடு' எனச் செ-யுளில் முறைமாறி நின்றது. கேடுகளுள் இயற்கையா- வருவன செங்கோலாலும் இறைவழிபாட்டாலும், யானையால் வருவது வேட்டையாலும், அரசரால் வருவது எதிர்ப்பாலும் போராலும் நீக்கப்படும். நானிலச் செல்வமாவன: நாடுபடு செல்வமும் காடுபடு செல்வமும் மலைபடு செல்வமும் அலை (கடல்)படு செல்வமுமாம்.
733. பொறையொருங்கு மேல்வருங்காற் றாங்கி யிறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.
(இ-ரை.) பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் தாங்கிய மக்களும் கால்நடையுமாகிய பொறை யெல்லாம் தன்னிடத்து வந்து தங்கினும் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதனால், தன் அரசனுக்குச் செலுத்த வேண்டிய புரவுவரி சிறிதுங் குறையாது முன்போன்றே முழுதும் விரும்பிச் செலுத்துவதே (பண்பாட்டிற் கேற்ற) நல்ல நாடாவது.
பிறநாட்டு மக்கள் கால்நடையுடன் வந்து குடிபுகுவதற்குக் கரணியம் பஞ்சம், கொடுங்கோல், பகையரசு புகுதல், வெள்ளம் முதலியவற்றுள் ஒன்றாம். 'தாங்குதல்' சொந்த நாடுபோல் உணவளித்துக் காத்தல். அது நிலவிரி வாலும் விளைவுப் பெருக்கத்தாலும் மக்கள் பண்பாட்டாலும் ஆட்சிச் செம் மையாலும் நேர்வதாம். குடிகள் வருவா- குன்றாமையால் வரிகொடுப்பதுங் குன்றாதாயிற்று. நாட்டார் செயல் நாட்டின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.
734. உறுபசியு - மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.
(இ-ரை.) உறுபசியும் - கடும்பசியும்; ஓவாப் பிணியும் - தீரா நோயும்; செறு பகையும் - அழிக்கும் பகையும்; சேராது இயல்வது நாடு - இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற) நல்ல நாடாம்.
'உறுபசி' உழவரின்மையாலும் நீர்வளம் நிலவள மின்மையாலும் நேர்வது. 'ஓவாப்பிணி' நிலக்கேட்டாலும் நச்சுக்காற்றாலும் தட்பவெப்ப மிகையாலும் நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. செறுபகை அரசனாற்றலும் நல்லமைச்சும் படைவலியும் அரண்வலியும் துணைவலியும் இன்மையால் நேர்வது. இக் குறைகளும் கேடுகளும் இன்றேல் அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை என்பதாம்.