உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆம் நீரது - நொச்சி மறவரின் போர்நிலைக்கு எளிதான நிலைமை யுடையதே; அரண் - சிறந்த கோட்டையரணாவது.

உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலை சூடி முற்றுகையிடப் பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகு தற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப் பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதா-த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சி யாரைத் தாக்காவாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.

746. எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
நல்லா ளுடைய தரண்.

(இ-ரை.) எல்லாப் பொருளும் உடைத்தா- - அரசனும் படைமறவரும் குடிகளுமாகிய அகத்தாரெல்லார்க்கும் வேண்டிய பொருள்களை யெல்லாம் உள்ளே கொண்டதா-; இடத்து உதவும் நல் ஆள் உடையது - நொச்சிமறவர் புண்பட்டும் மடிந்தும் விழவிழ உடனுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்து பொருதுதவும் நன்மறவரை யுடையதே; அரண் - சிறந்த கோட்டையரணாவது.

அரசப்பத்தியும் நாட்டுப்பற்றும் மறமும் மானமும் ஊக்கமும் ஒருங்கேயுடைய மறவரை 'நல்லாள்' என்றார். எல்லாப் பொருளு முடைமையால் நெடுநாள் முற்றுகையைத் தாங்குதலும், இடத்துதவும் நல்லாளுடைமையால் தோல்வியுறாது வெற்றிபெறுதலும், கூடுமென்பது கருத்து.

747. முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.

(இ-ரை.) முற்றியும் - வெளிப்போக்கிற்கும் உட்புகவிற்கும் இடமில்லா வாறு நெருங்கி மதிலைச் சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் அங்ஙனம் சூழாது மதிலின் இளந்த இடம்நோக்கி ஒன்றுதிரண்டு முனைந்து பொருதும்; அறைப்படுத்தும் - அமைச்சரையும் படைத்தலைவரையும்