உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

68

திருக்குறள்

தமிழ் மரபுரை


'இல்ல தரண்' என்றார். உம்மை உயர்வுசிறப்பு. இவ் விரு குறளாலும் வினை மாட்சியின்றி அரண்மாட்சி பயன்படாமை கூறப்பட்டது. 'இல்லை யரண்' என்பது மணக்குடவர் கொண்ட பாடம்.

உறுப்பியலில் அரண்பகுதி முற்றிற்று.

அதி.76- பொருள்செயல்வகை

அதாவது, அரசன் அமைச்சரோடு கூடித் தன் நாட்டை அரணாற் காத்து, தனக்கும் தன் ஆட்சிக்கும் இன்றியமையாத பொருளைத் தன் குடி களிடத்தும் பகைவரிடத்தும் நண்பரிடத்தும் தேடும் வழிகள். இவற்றுள், அரசன் பாதுகாப்பின்கீழ்க் குடிகள் பல்வேறு தொழில் செ-து பொருளீட்டு தலும் அடங்கும்.

751. பொருளல் லவரைப் பொருளாகச் செ-யும்
பொருளல்ல தில்லை பொருள்.

(இ-ரை.) பொருள் அல்லவரை - பிறரால் ஒரு பொருளாக மதிக்கப் படாதவரையும்; பொருளாகச் செ-யும் பொருள் அல்லது - மதிக்கப்படச் செ-யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை - சிறந்த பொருளொன்று இவ் வுலகத்தில் இல்லை.

மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செ-தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செ-தல். இழிவுசிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற் பொருட் பின்வருநிலை. பொருட்பின் வருநிலை வரையறைப்பட்டது.

752. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செ-வர் சிறப்பு.

(இ-ரை.) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - மற்றெல்லா நலமுடைய ராயினும் செல்வமில்லாதவரைத் தாயுட்பட எல்லாரும் தாழ்வாகக் கருதுவர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செ-வர் - வேறொரு நலமும் இல்லாத வராயினும் செல்வமுடையாரை அரசனுட்பட எல்லாரும் மதித்துப் போற்றுவர்.

எள்ளுதலாவது பார்த்தலும் உரையாடுதலுஞ் செ-யாமை. சிறப்புச் செ-தலாவது அரசன் பட்டமளித்தலும், அரசனும் பெற்றோருந் தவிர