பிறரெல்லாம் கை கூப்புதலும் மதிப்பான இருக்கை யளித்தலும், எல்லாரும் அவர் வேண்டுகோளை நிறைவேற்றலுமாம். எள்ளுதல் என்னும் உளவினை, இகழ்தலாகிய வா-வினையையும் புறக்கணித்தலாகிய மெ-வினையையுந் தழுவும். செல்வத்தின் சிறப்பை வலியுறுத்தும்பொருட்டு இருவகையாலுங் கூறினார்.
"கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தா-வேண்டாள்
(நல்வழி,34)
753. பொருளென்னும் பொ-யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.
(இ-ரை.) பொருள் என்னும் பொ-யா விளக்கம் - செல்வம் என்று எல்லாராலுஞ் சிறப்பித்துச் சொல்லப்பெறும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னை உடையவர்க்கு அவர் கருதிய தேயத்துச் சென்று பகையென்னும் இருளைப் போக்கும்.
எக்காலத்தும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாதலாலும் எல்லாரையும் விளங்கச் செ-தலாலும், 'பொ-யா விளக்கம்' என்றும்; ஏனை விளக்கொடு வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும், பகையை விரைந்தழித்தல்பற்றி 'இருளறுக்கும்' என்றும் கூறினார். பகையென்னும் இருள் என்னாமையால் இது ஒருமருங் குருவகம். இம் மூன்று குறளாலும் செல்வத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
754. அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
(இ-ரை.) திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - முறையறிந்து ஈட்டப்பட்டு ஒருவருக்குந் தீங்கு செ-யாது நேர்மையாக வந்த செல்வம்; அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அதை யீட்டியவனுக்கு அறத்தையும் விளைவிக்கும், இன்பத்தையும் விளைவிக்கும்.
ஈட்டுந் திறமாவது அவரவர் தத்தம் தொழில்துறையில் அறிவாலும் உழைப்பாலும் நேர்மையாக ஈட்டுதல். அரசன் பொருளீட்டுந் திறம் உழவ ரிடம் ஆறிலொரு பங்கு விளைபொருளும் பிற தொழிலாளரிடம் குறிப்