உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இராவணன் முதல்நாட் போரில் தன் படையும் படைக்கலமுந் தேரு மிழந்து தன்னந்தனியனா- நின்றபோது, இராமன் இரங்கி "இன்றுபோ நாளைப் படையொடுவா" என்று கூறி விடுத்ததாகவுள்ள கம்பவிராமாயணச் செ-தி, ஊராண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம்.

"ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை, யின்றுபோ-ப் போர்க்கு
நாளை வாவென நல்கி நாகிளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்."

(கம்பரா. யுத்த. 1218)

இங்ஙனங் போர்க்களத்தில் தனித்து நின்ற பகைவர்க் குதவுதலும், புறங்கொடுத்தார் மீதும் அடைக்கலம் வேண்டினார் மீதும் படைக்கலம் தொடாமையுமான ஊராண்மையைத் 'தழிஞ்சி' என்னும் வஞ்சித் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை (3:20) கூறும். இரு கூற்றும் ஒரே சாராருடைய யதாகையால், 'என்ப' என்பது பின்னும் இயைந்தது. எஃகு ஆகுபெயர்.

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெ-வேல் பறியா நகும்.

(இ-ரை.) கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் - தன் கையிலிருந்த வேலைத் தன்மேல் வந்த போர்யானையைக் கொல்லுமாறு எறிந்துவிட்டு, அடுத்து வந்த வேறொரு போர்யானையைக் கொல்ல வேல் தேடித் திரும்பி வருகின்ற யானைகொல்லி மறவன், மெ-வேல் பறியா நகும் - தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்ச்சியடைவான்.

'களிற்றொடு போக்கி' என்றதனால் யானைகளைக் கொல்வதையே குறிக்கோளாகக் கொண்ட மறவன் என்பது பெறப்படும். களிற்றொடு போக்குதலாவது களிற்றின் உயிரைப் போக்குமாறு வேலைப் போக்குதல். 'மெ-வேல் பறியா நகும்' என்றதனால், தன் மார்பில் பகைவர் வேல் தைத்ததையும் மறமிகுதியால் உணரவில்லையென்பதும், மேன்மேலும் போர் விருப்பினன் என்பதும் அறியப்படும். இங்ஙனம் மெ-வேல் பறித்தெறிதலை 'நூழிலாட்டு' என்னும் தும்பைத் துறையென்பர் ஐயனாரிதனார் (பு.வெ. 7:16).

775. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னோட்டன்றோ வன்க ணவர்க்கு.