உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) விழித்த கண் - பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்த கண்; வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின், வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ - அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்த லாகுமன்றோ!

'அழித்து' என்பது 'அழித்தழுதாள்' (குறள். 1317) என்பதிற்போல நின்றது. 'ஓட்டு' தோற்றோடல். இங்கு ஓட்டென்றது ஓட்டாகக் கருதப்படுதலை. சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்து நோக்கார் என்பதாம்.

776. விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.

(இ-ரை.) தன் நாளை எடுத்து - கடந்துபோன தன் வாழ்நாள்களை யெல்லாம் எடுத்தெண்ணி; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள், போரிற் சிறந்த புண்படாத நாள்களையெல்லாம் - வீணாகக் கழிந்த நாள்களோடு சேர்ப்பான் தூய பொருநன்.

விழுப்புண் மார்பிலும் முகத்திலும் பட்ட பெரும் புண். முதுகிற்பட்டது பழிப்புண். பொருநாளாயினும் விழுப்புண் பெறாநாள் வெறுநாளாகக் கருதுவான் என்பதாம். பொருநன் போர்மறவன். விழுப்புண் பெறாநாள் வீணாளாகவே, பெற்றநாள் மாணாள் என்பதாம்.

777. சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

(இ-ரை.) சுழலும் இசை வேண்டி - விண்ணகத்திற்குத் தம்முடன் வராது மண்ணகத்தையே சூழ்ந்து நிற்கும் புகழை விரும்பி; வேண்டா உயிரார் - இங்கு, உடலோடு கூடி உயிர்வாழ விரும்பாத மறவர்; கழல் யாப்புக் காரிகை நீர்த்து - தம் காலில் மறக்கழலைக் கட்டிக்கொள்ளுதல் ஒரு தனியழகு பெறுந் தன்மையதாம்.

'சுழலும்' எனவே, அதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. சூழ்தல் பார் முழுதும் பரவுதல். உருண்டையானதென்று பொருள்படும் உலகம் என்னும் பெயருக்கேற்பச் 'சுழலும்' என்றார். பிற அணிகள் பெண் டிர்க்குப்போல் ஆடவர்க்கு அழகு செ-யாமையின், ஆடவர்க்குச் சிறப்பாக