உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வுரிய மறக்கழலணியைக் 'காரிகை நீர்த்து' என்றார். 'உயிர்' ஆகுபெயர். உயிர்வேண்டார் என்பதை 'வேண்டா வுயிரார்' என்றது செ-யுள் நடை. மறக்கழலை வெண்டையம் என்பது உலக வழக்கு.

778. உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்.

(இ-ரை.) உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்வரின் இறப்பிற்கஞ்சாது மகிழ்ந்து போர்க்களத்திற்குச் செல்லும் மறவர்; இறைவன் செறினும் சீர் குன்றல் இலர் - தம் அரசன் அதுவேண்டாவென்று தடுப்பினும் தம் மறந் தளர்தல் இல்லை.

நாள்தொறும் வருந்தியுழைக்கும் உழைப்பாளிகள் வேலை செ-யாது சோம்பியிருத்தலை வெறுத்தல் போல, போருக்கேற்ற மறமும் உடல்திறமும் பயிற்சியும் பெற்ற மறவர் போரின்றியிருத்தலை வெறுத்தல் இயல்பே. இதை,

"போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய

செல்வே மல்லே மென்னார்"

(புறம்.31)

"உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென

நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"

(புறம்.68)

"மண்டமர் நசையொடு கண்படை பெறாஅது"

(முல்லைப். 67)

என்பவற்றால் அறிக.

779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

(இ-ரை.) இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாதவாறு, தம் குறிக்கோள் நிறைவேறாதவழிச் சாகவல்ல மறவரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே - அவர் தோல்வியைச் சொல்லி இகழ்தற் குரியார் இவ் வுலகத்தில் யார்தான்!

'இழைத்தல்' வஞ்சினங் கூறுதல். அது இன்னது செ-யேனாயின் இன்னேனாகுக எனச் சூளுறுதல். இன்னேனாகுக என்பது என் பகைவருக்கு அடிமை யாவேனாக என்பதும், என் மீசையைக் களைந்து பெண்மைத்