உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

83

ஒரு மாணவன் தன் சிறந்த மதிநுட்பத்தாலும் அறிவாற்ற லாலும் ரு மேல்வகுப்பிற்குத் தகுதியுள்ளவனா யிருப்பின், அவன் காலத்தை வீணாக்காதபடி அவனுக்கு இரட்டையுயர்த் தம் (double promotion) அளிக்கலாம்.

ஏதேனும் ஒரு துறையில் ஒரு மாணவன் 'உறுமதி' (genius) என்று காணப்படின், அரசு அவனைக் குலமத கட்சிச்சார்பு நோக்காது ஊக்குதலும், அவன் அயல்நாட்டிற்குச் செல்லா வாறு அவனுக்கு உயர்ந்த சம்பளம் அல்லது மானியம் அளித்தலும் வேண்டும்.

தேர்விற் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே, எல்லா மாணவரையும் வகுப்புயர்த்த வேண்டும் என்னும் நெறிமுறை தவறாகும். ஒரு மாணவன் ஆண்டு முழுதும் வகுப்பில் எல்லாப் பாடத்திலும் முதல்வனாயிருந்து, தேர்வு சமையத்தில் நோய்வாய்ப்பட்டுத் தேர்வெழுத முடியாது போகலாம். அவன் நலம் பெற்றபின், அவனுக்குத் தனித்தேர்வு வைத்தும் வைக்காதும் வகுப்புயர்த்தம் செய்யலாம். அரசியல் தேர்வாயின், தனித்தேர்வு வைத்தல் இயலாது. அத்தகைய நிலையில், தலைமையாசிரியர் அல்லது முதல்வர் உட்பட ஆசிரியர் அனைவரும் ஒருமனமாகச் செய்யும் வன்மையான பரிந்துரையடிப்படையில், அரசு தகுதித்தாள் வழங்கவுஞ்

செய்யலாம்.

ஒருசில மதிநுட்ப மாணவர், சோம்பலாலோ கவலை யின்மையாலோ தேர்வுக்காலத்தில் ஊன்றிப் படியாது, தேறலளவே மதிப்பெண் பெறுவதும்; சில மாணவர் மாட்டு ழைப்பினாலும் நெட்டுருவினாலும் முதல் மதிப்பெண் பெற்றுப் பரிசு பெறுவது முண்டு. இது முயலாமைப் பந்தயம் போன்றது. ஆயினும், பரிசு நோக்கி மாணவர் பெருமுயற்சி மேற்கொள் வதும், முதல் மதிப்பெண் பெற்றவர்க்கு அரசல்லாத தனிப்பட்ட நிறுவனங்கள் பரிசளித்துப் பிறரையும் பெறுமாறு தூண்டு வதும், மிகப் பாராட்டத் தக்கனவாகும்.

எனினும், பரிசுபெற்ற மாணவரே தலைசிறந்த மதியர் அல்லது ஆற்றலரென்றும், பிறரெல்லாம் அவரினுந் தாழ்ந்த வரென்றும், கருதுதல் தவறாகும். குடும்பத்தொல்லையாலும் டமாற்றத்தாலும் இயற்கைத் துன்பத்தாலும் வேறுசில தடைகளாலும், ஒருசிலர்க்குத் தேர்விற்குப் படிக்கப் போதிய நாளும் நேரமும் இல்லாமலும் போகலாம். ஆதலால், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவரையெல்லாம் அரசு போற்றுதல் வேண்டும்.