உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அதற்கடுத்து, மாநகர் அரசு கல்வி நிலையங்களில் அதைக் காண லாம்.

குலச் சார்பாகவும் மதச் சார்பாகவும் கட்சிச் சார்பாகவும் இடச் சார்பாகவும் கருத்துச் சார்பாகவும் மாணவர் கூடிக் கொண்டு, வேலைநிறுத்தஞ் செய்வதும், உண்ணாநோன் பிருப்பதும், மறியல் செய்வதும், ஆசிரியரை முற்றுகையிடு வதும், அவரைப் பழிப்பதும், தாக்குவதும், கல்விநிலைய உடைமைகட்குச் சேதம் விளைப்பதும், மாணவர் மாண்பிற்குத் தகாத கல்லா மக்கள் கயமையாகும்.

உண்மையான குறையிருப்பின், அதை நீக்குமாறு கல்வி நிலையத் தலைவரிடம் அல்லது மேலாண்மையிடம் (Management) வேண்டுதல் செய்யவேண்டும். அதனால் தீராவிடின், கல்வியதி காரியிடமும், அதன்பின் அமைச்சரிடமும், அதற்கும் பின் பொதுமக்களிடமும், வன்செயலின்றி முறையிடல் வேண்டும்.

எந்நிலைமை நேரினும், நாள்தொறும் குறித்த நேரத்தில் வகுப்பறையிலிருத்தலும், ஆசிரியர்க்கு அடங்கி நடத்தலும், கற் பிப்பைக் கருத்தாய்க் கவனித்தலும், பயிற்சிகளை ஒழுங்காய்ச் செய்துவரலும், தேர்வெழுதித் தேறும்வரை கல்வியிலேயே முழுக் கவனத்தையுஞ் செலுத்துதலும், நன்னடத்தைச் சான்று பெறுதலும் மாணவர் கடமையாகும்.

தமிழ மாணவர், கட்டாய இந்தி யெதிர்ப்பு ஒன்றிலன்றி வேறெந்தக் கிளர்ச்சியிலும் ஈடுபடுதலும் ஊர்வலம் வருதலுங் கூடாது.

ஆண்டிறுதியில், கட்டுரைப் போட்டி, சொற்பொழிவுப் போட்டி, இசைப் போட்டி, நடிப்புப் போட்டி, விளையாட்டுப் போட்டி முதலிய பல்வேறு போட்டிகள் நடத்தி, அவற்றில் வெற்றிபெற்ற மாணவர்க்குப் பரிசளிக்கும் ஆண்டுவிழாவும், கல்விநிலையந்தோறும் நடைபெறுதல் வேண்டும்.

சில கல்விநிலையங்களில் மாணவ மாணவியர்க்குக் கூட்டியம் (Band) பயிற்றி வருகின்றனர். அது மிகப் பாராட்டத் தக்கதாகும்.

இனி பள்ளிகளில் குருளையர் (Cubs), வேயர் (Scouts), வழிகாட்டியர் (Guides) இயக்கமும்; கல்லூரிகளில் திரிநர் (Rovers) இயக்கமும், மாணவ மாணவியர்க்கும் பொதுமக்கட்கும் பயன்படுவனவே.