உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

81

வைத்திருத்தல் வேண்டும். அவற்றை ஏழை மாண வர்க்கெல்லாம் இலவசமாகக் கொடுத்து ஏனை மாணவர்க்கு அடக்க விலைக்கு விற்கவேண்டும்.

மாணவரும் தம் பெயருக்குப்

ஆசிரியரும் பின் குலப்பட்டங்களைச் சேர்த்தல் கூடாது. அப் பட்டங்கள் மக்களி னத்தைப் பல்வேறு உயிரினங்களாகக் காட்டி, அவர்க்குட் பிரிவினையும் பகைமையும் உண்டுபண்ணுவதனாலும், ஆசிரியன் தன்னை மாணவனினும், மாணவன் தன்னை ஆசிரியனினும் பிறப்பில் உயர்ந்தவனாகவோ தாழ்ந்த வனாகவோ கருத இடந்தருவதனாலும், பிற நாடுகளிற்போல் தொழில்பற்றி யமையாது பிறப்புப்பற்றி யமைவதனாலும், அவற்றை வழங்குவது கல்விக்கு முற்றும் முரணாகும்.

ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், போதிய அளவு மாணவர் இருக்கைகள், திறமையுள்ள ஆசிரியர், ஆய்வுக்களம் (laboratory), நூலகம் (library), கல்வித்திரையரங்கு, கூட்டுறவுப் பொத்தகசாலை, குடிநீரறை, உண்ணகம், ஆடிடம் (playground), சலக்கப்புரை (latrine), மாணவர் விடுதி முதலிய ஏந்துகள் (வசதிகள்) இருத்தல் வேண்டும். ஆண்டுதோறும் மருத்துவ நோட்டம் (Medical examination), கல்வியதிகாரியின் உண்ணோட் டம் (Inspection), புறப்போக்கு (Excursion) ஆகியவை ஆண்டி டையே நிகழ்தல் வேண்டும்.

காலாண்டுத் தேர்வும் அரையாண்டுத் தேர்வும் ஆண்டுத் தேர்வும் நிகழ்ந்தபின், முறையே, ஒரு கிழமையும் இரு கிழமையும் ஒரு மாதமும் விடுமுறையும் இருத்தல்வேண்டும். கல்லூரி யாயின், வேனில் விடுமுறை இருமாதமும் மேலும் இருக்கலாம்.

முத்தேர்வுகட்கும் இடையே, நறுக்காய்வு (slip-test) அல்லது திடுந்தேர்கை (surprise test) மாதந்தொறும் இருப்பது நன்று.

மாணவர்க்குக் கட்டொழுங்கு (discipline) இன்றியமையா தது. “தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்." பெற்றோர்க் கடங்காத பிள்ளைகளும் செல்லமாய் வளரும் பிள்ளைகளும் கல்வி நிலையங்களில்தான் திருந்தவேண்டும். அங்குந் திருந்தா தவர் அரசு தண்டிப்பினுந் திருந்துவது அரிது.

பொதுவாகக் கிறித்தவக் கல்வி நிலையங்களில் அவற் றுள்ளும் சிறப்பாக உரோமை வியனுலகச் (Catholic) சவைக் குருமார் நடத்துபவற்றில்தான் கட்டொழுங்கு சிறந்திருக்கும்.