உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இல்லாதவர் ஆகிய மூவகையாரும் தமிழ்வாயிற் கல்வியையும், ஏனையோரெல்லாம் ஆங்கிலவாயிற் கல்வியையும் மேற் கொள்ளலாம். இங்குத் தமிழ்வாயில் என்றது தமிழ்நாட்டை நோக்கி. ஏனை நாடுகளில் அவ்வந் நாட்டுத் தாய்மொழியே இரு கல்விவாயில்களுள் ஒன்றாகும்.

மாணவியர்

உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும், மாணவ தெரிப்புப் பாடங்களைத் தத்தம் திறமைக்கும் மனப்பான்மைக்கும் எதிர்காலத்திற் செய்ய விரும்பும் தொழி லுக்கும் ஏற்றவாறே தெரிந்து கொள்ளல் வேண்டும். வேறு பாடவகுப்பில் அவர் சேரவும், தலைமையாசிரியரும் முதல்வரும் அவரைச் சேர்க்கவும் கூடாது. எல்லா மாணவர்க்கும் பொதுக் கலைக் கல்லூரிகளில் இடந்தர வேண்டும். தகுதியுள்ளவரையே கையூட்டும் நன்கொடையும் பெறாது சேர்த்தல் வேண்டும்.

பள்ளியிறுதித் தேர்வில் தவறியவர்க்கும் குறைந்த மதிப் பெண் வாங்கியவர்க்கும் வெவ்வேறு கைத்தொழிற் பயிற்சியளித் தல் வேண்டும். நாட்டிற் பிறந்த எல்லாரும் வாழவேண்டுமாத லால், தாமாக ஒரு தொழில் முயற்சியை மேற்கொள்ளாத வர்க்கெல்லாம், அரசே அவரவர் திறமைக்குத் தக்கவாறு பயிற்சியளித்துப் பணியிலும் அமர்த்த வேண்டும்.

கல்லூரிகளில் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழி யிலும் மாணவர் மன்றம் ருக்கலாம். ஆயின், கட்சிச்சார்பை அறவே விலக்கல் வேண்டும். அவ்வம் மொழியறிவாற்றலில் தலைசிறந்த மாணவரே மன்றத் தலைவராதல் வேண்டும்

இன்று ப.மு.வ. (P.U.C.) வரை எல்லா மாணவர்க்கும் இலவசக் கல்வியுள்ளது. ஏழை மாணவர்க்கெல்லாம் மேற் கல்வியும் இலவசமா யிருக்கலாம். கூட்டுடைமை நாடாயின், எல்லாக் கல்வியும் எல்லா மாணவர்க்கும் இலவசமாயிருக்கும்.

ஒரு பாடவகுப்பிற் பலர்க்கு இடமில்லாவிடின், புதுப் பிரிவுகளைத் தோற்றுவித்தல் வேண்டும். அங்ஙனமே, ஏற்கென வேயுள்ள கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்க் இடமில்லாவிடின் புதுக் கல்லூரிகளைத் தோற்றுவித்தல் வேண்டும்.

கு

பள்ளிகளும் கல்லூரிகளும் கல்வி யாண்டுத் தொடக்கத் தில் திறக்குமுன்னரே, பாடப்பொத்தகங்க ளெல்லாவற்றையும், எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை, கருத்துப்பிழை, இலக்கணப்பிழை ஐவகைப் பிழையுமின்றி அச்சிட்டு, அணியமாய்

ஆகிய