உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

79

தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழியும் கற்பிக்கப்பட லாம். ஆயின், துவக்கக்கல்வி முழுவதும் தமிழ் வாயிலாகவே நிகழ்தல் வேண்டும். நாலாண்டு முடிவில் எல்லாப் பிள்ளைகளுந் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருப்பர்.

கல்விவாயிலா

ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுத் தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய இருமொழியே கற்பிக்கப்படலும் யிருத்தலும் வேண்டும். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும், அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும். தெலுங்கு நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் தெலுங்கையும், மராத்தி நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் மராத்தியையும், இந்தி நாட்டிலுள்ள தமிழர் பிள்ளைகள் இந்தியையுந்தான் கற்றல் வேண்டும். இங்ஙனமே ஏனைமொழி யார் மக்களும். அல்லாக்கால், மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாகும்.

பிறமொழி நாட்டில் வாழும் ஒரு வகுப்பார் அல்லது கூட்டத்தார், தம் மக்கட்குத் தம் தாய்மொழியே கற்பிக்க விரும்பின், அவரைத் தம் தாய்மொழி நாட்டிற்கே அனுப்பி விடுதல் வேண்டும்.

சிறுபான்மையர் உரிமையைப் பேணல் என்பது, அனைத் திந்தியப் போங்கான ஆங்கிலோ இந்திய மக்கட்கு ஆங்கிலக் கல்வி கற்பித்தல் போன்றதேயன்றி, நாட்டுவாரியான சிறு பான்மை மக்கட்கெல்லாம் அவரவர் தாய்மொழியைக் கற்பித் தலன்று. நாடுதோறும் சிறுபான்மையர்க் கெல்லாம் அவரவர் தாய்மொழியையே கற்பித்தல் வேண்டுமெனின், நீலமலை யிலுள்ள படகர், கோத்தர், துடவர், இருளர் முதலியோர்க்கும், ஆனைமலையிலுள்ள காடர், மலசர், மலையரையர், முதுவர் முதலியோர்க்கும், பிற மலைகளிலுள்ள பிறர்க்கும், அவரவர் தாய்மொழியாகிய கொடுமொழியிலேயே கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். அது கூடாமையின், இந்திய வொன்றிய வுறுப்பாகிய பதினான்மொழி நாடுகளிலும் உள்ள பிறமொழிச் சிறுபான்மையர்க்கும், அவரவர் மொழியிற் கற்பித்தல் கூடாதென்க.

துவக்கக் கல்வி முடிந்தபின், பாதிப்பேர் தொழிற்பயிற்சி பெறலாம்; மீதிப்பேர் நடுத்திறப் பள்ளிகளிற் சேரலாம். நடுத்திறப் பள்ளிக் கல்வியிலிருந்து பல்வகைப்பட்ட கல்லூரிக் கல்வி வரையும், இருமொழிவாயிற் கல்வி இருக்கலாம். மேற்கல்வி கல்லாதவர், வெளிநாடு செல்லாதவர், ஆங்கிலங் கற்கும் ஆற்றல்