உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ஆதலால், விலையேற்றத்தை ஒரேயடியாய்த் தவிர்த்து விடுவதே தக்கதாம். அல்லாக்கால், பொருள்விலை யேறிக் கொண்டே போகவும், அடிக்கடி சம்பளத்திட்டக் குழுக்கள் (Pay Commissions) அமைக்கப் படவுமே நேரும்.

இனி, பழக்கடைகளில், பச்சைமுந்திரி (திராட்சை), உருளையன் (சப்போட்டா), மேலை (சீமை) யிலந்தை முதலி யவை வாங்குவார்க்குப் பயன்படாவாறு காய்ப்பதத்திலும், சில காய்களும் கனிகளும் அழுகிய நிலையிலும் விற்கப்படுதலையும் தக்க அதிகாரிகளைக் கொண்டு ஆய்ந்து அரசு தடுத்தல் வேண்டும்.

ஒரு நாடு செல்வஞ் சிறப்பது வாணிகத்தினாலேயே யாத லால், நானில இயற்கை வளத்தையும் பல்தொழிற் செயற்கை வளத்தையுந் தொகுத்து, நிலவாணிகத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைகளமைத்தும், நீர் வாணிகத்திற்குத் துறைமுகங்களும் கலங்களும் கட்டியும், ஏற்றுமதியைப் பெருக்கி யும் இறக்குமதியைச் சுருக்கியும், தலைசிறந்த வணிகர்க்கு எட்டிப் பட்டங் கட்டியும், இருவகை வாணிகத்தையும் அரசு போற்றி வரல் வேண்டும்.

துவக்கக் கல்வி

4. கல்வியைப் பரப்பலும் உயர்த்தலும்

ஓர் உண்மைக் குடியரசு நாட்டில் அல்லது கூட்டுடைமை நாட்டில் நூற்றுமேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்தவராயிருக்க வேண்டு மாதலின், ஐந்தகவைக்கு மேற்பட்ட எல்லாப் பிள்ளைகட்கும் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியளித்தல் வேண்டும். காரைக் கட்டடங்களில் இடமில்லாவிடின், அவற்றைக் கட்டும்வரை கூரைக் கூடங்களிற் பள்ளிகளை நடத்துதல் வேண்டும். இது மேற்கல்வி நிலையங்கட்கும் ஒக்கும். ஏழைப் பிள்ளைகட் கெல்லாம் பள்ளிகளில் நண்பகலுணவும் அளித்தல் வேண்டும். பொத்தகம் வாங்க இயலாதவர்க் கெல்லாம் பொத்தகமும் அளித்தல் வேண்டும்.

சேர்ப்புப் படிவங்களிலும் பதிவேடுகளிலும் பெற்றோரின் தொழில் தவிர, பிறப்புப்பற்றிய குலப்பெயர்க் குறிப்பு இருத்தல் கூடாது. எல்லாரும் ஓரினம் என்னும் சமவுணர்ச்சியே பள்ளிச் சூழலில் நிலவவேண்டும். இங்கு மாணவ மாணவியர்க்குச் சொன்னதே ஆசிரியர்க்கும்.