உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

85

பயிற்சியும் மனப்பான்மையும் பண்பாடும் திறமையும் வேண்டும். குறளர் சிந்தர் முடவர் மொண்டியர் முதலிய உடற்குறையர் எங்ஙனம் காவல் துறைக்கும் படைத்துறைக்கும் தகுதியற்றவரோ, அங்ஙனமே பண்பாட்டுக் குறையரும் வினைத்திறமைக்

குறையரும் எல்லாப் பணிக்கும் தகுதியற்றவராவர்.

சில பணிகட்கு மனமொழிமெய் யென்னும் முக்கரணத் தகுதியும் வேண்டும்; சில பணிகட்கு ஓரிரு கரணத் தகுதியிருப் பினும் போதும்.

ஒரு பாடத்துறைக்குத் தகுதிவாய்ந்த மாணவரை மற்றொரு டத்துறையிற் பயிற்றுவது போன்று, ஒரு பணித்துறைக்குப் பயின்றவரை அல்லது தகுதியுள்ளவரை மற்றொரு பணித் துறைக்கு அமர்த்துவது,

"விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங்கு அறாஅ அருநகை யினிதுபெற் றிகுமே

""

(புறம்.378:14-22)

என்னுஞ் செய்யுட் பகுதியையே நினைவுறுத்துகின்றது.

நடுவணரசு தலைமை மந்திரியாரும் (Prime Minister) நாட்டரசு முதலமைச்சரும் (Chief Minister), சில சமையங்களில், அமைச்சரின் தகுதி நோக்காது விருப்பம்பற்றியே வாரியங் களைப் பகிர்ந்தொதுக்குவதும், இத்தகையதே.

எல்லாப் பணித்துறைகளுள்ளும் திறந்த மடம் போன்றது தமிழ்த்துறையே. ஏனைத் துறைகளில் இடமில்லாதவரெல்லாம் தமிழ்த்துறையில் இடம் பெறலாம்.

வழக்கறிஞர், பொதுவாகத் தம் வழக்காளிகட்கு வெற்றி விளைக்கும் பொருட்டுத் தாம் கொண்டதே கோலமென வலிக்கும் மனப்பான்மையர். தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய நிலைமைகளிற் போன்றே, அடிமுதல் முடி வரை தருக்கத்திற் கிடமாயிருப்பதிலும் தனிச்சிறப்புடையது தமிழ். காலஞ்சென்ற எஸ். வையாபுரிப்பிள்ளை, தாம் பதிப்பித்த