உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில் விழித்தல் என்னுஞ் சொல்லிற்குத் தெளிவாதல் என்பது ஒரு பொரு ளென்று கண்டும், “விழிப்பத் தோன்றா" என்னுந் தொல்காப் பியச் சொற்றொடர்க்கு, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்த னவே" (தொல்.பெய.1) என்று தொல்காப்பியரே கூறியதையும் நோக்காது,”தோன்றா" என்றே பொருள் கொண்டார். அதன் மேலும், வரி என்னும் தூய தென் சொல்லிற்கு மூலம் 'பலி' என்று வழுப்படக் குறித்ததுமன்றி, அதை அவ் வகரமுதலியின் தனிச் சிறப்புகளுள் ஒன்றாகவுங் காட்டினார். தாம் எழுதிய சில கட்டு ரைகளாலுங் கட்டுரைத் திரட்டுகளாலும் அவர் தமிழுக்குச் செய்த கேடு அளவிடுந் திறத்ததன்று. அவர் வழியினரும், தமிழெல்லைக்குட் புகுந்து, குசராத்தியாரும் தமிழ்நாட்டு மேனாள் ஆள்நருமான கே.கே. சா தமிழ் சமற்கிருதத்திற்கு மூலமென்று தேற்றமுறக் கூறிய பின்பும், சிறிதும் நாணமின்றித் தமிழ்க் கேட்டுப் பணியில் தலைவிரித் தாடுகின்றனர்.

ஒருதுறைக் கல்வி கற்றவர் வேறொரு துறைக்குந் தகுதி யுள்ளவராயிருப்பதுமுண்டு. காலம்சென்ற வழக்கறிஞர் கா. சுப்பிரமணியப் பிள்ளையும் ச. சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பேராசிரியரானதும், மெய்ப்பொருளியற் பண்டாரகர் இராதாகிருட்டிணனார் குடியரசுத் தலைவரானதும், இதற்கு எடுத்துக்காட்டாம். ஆயின், இது அருகி நிகழ்வதும் பொது வியல்பிற்கு விலக்கானதுமாகும். இவ்விலக்கு நிலைமையை, இருதுறைப் பணித்திறமை இயல்பாக அமைந்த தென்றோ, பெற்றோர் விருப்பப்படி ஒரு துறைக்குப் பயின்றபின் மற்றொரு துறைக்குத் தம் விருப்பப்படி பயின்றதென்றோ கொள்ளலாம். பல்பணித் தகுதி

ஆசிரியப் பணிக்கு, கற்பிக்கும் பாடத்துறையிற் புலமை, கற்பிப்புப் பயிற்சி, சாந்துணையுங் கற்றல், நல்லொழுக்கம், பொருள் விளக்குந் திறன், நாவன்மை, மாணவர்மாட்டன்பு, நடுநிலைமை, பொறுமை, இன்முகம், இன்னுரை, உரத்த குரல் என்பன இன்றியமையாதன.

தமிழாசிரியப் பணிக்கு, மேற்கூறியவற்றொடு தமிழ்ப் பற்றும் ன்னிசையாய்ப் பாடுந்திறனும் வேண்டும். தமிழ்ப் பற்றுண்மை யின்மையைப் பின்வரும் கொள்கை வேறுபாட் டால் அறிந்து கொள்ளலாம்.