உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

தமிழ்ப்பற்றாளர் கொள்கை

1. தமிழன் பிறந்தகம் குமரிநாடு. தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள்.

2. மாந்தன் பிறந்தகமும் குமரிநாடே.

3. தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும்.

4. இந்திய நாகரிகம் தமிழரது.

5. தமிழ் இயன்மொழி, தனி மொழி

6. கடன் கொள்வதால் தமிழ் தளரும்

7. இறையனாரகப் பொருளுரை யினின்று பெரிதும் வேறுபட்ட முக்கழகங்கள் பண்டைத் தமிழகத் திருந்தன.

8. தமிழே வழிபாட்டு மொழி யாகவும் சடங்கு மொழியாகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ்ப்பகைவர் கொள்கை

தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர்

தமிழ் திரவிடத்தை யொத்தது; ஆரியத்தாற் பெரிதும் வளம் படுத்தப்பட்டது.

இந்திய நாகரிகம் பல இனத்தாரின் கூட்டு நாகரிகம்.

தமிழ் திரிமொழி, கலவை மொழி

கடன் கொள்வதால் தமிழ் வளரும்.

பண்டைத் தமிழகத்தில் ஒரு கழகமும் இருந்ததில்லை.

வடமொழியே வழிபாட்டு மொழியாகவும் சடங்கு மொழியாகவும் தொடர்தல் வேண்டும்.

87

9. தமிழ்நாட்டிற்கு இருமொழித்

தமிழ்நாட்டிற்கும் மும்மொழித்

திட்டமே ஏற்றது.

திட்டம் ஏற்கும்.

10. இந்தியப் பொதுமொழியா

இந்தியப் பொதுமொழியா

யிருக்கத்தக்கது ஆங்கிலமே.

யிருக்கத்தக்கது இந்தியே.

தமிழாசிரியர்,

வரலாற்றாசிரியர்,

தொல்பொரு

ளாராய்ச்சியாளர், மொழியாராய்ச்சியாளர், மதவாராய்ச்சியாளர் முதலிய பதவிகட்கு, அரசு தமிழ்ப்பகைவரை அமர்த்துதலும், அவர் எழுதிய நூல்களைப் பாடமாக வைத்தலும் கூடாது.

கொச்சை நடையைக் கையாண்டு தமிழைக் கெடுக்கும் நாட்சரி (Daily), கிழமையன் (Weekly), மாதிகை (Magazine), காலாண்டிதழ் (Quarterly), ஆண்டுமலர் (Annual) முதலிய வெளி யீடுகளை அரசு கண்டித்தலுந் தண்டித்தலும் வேண்டும்.