உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

பேராசிரியப் பதவிக்கு, அவ்வப் பாடத் துறையிற் கல்வியும் ஆராய்ச்சியும் பட்டறிவும் மிக்க துணைப் பேராசிரியரை அமர்த்தலாம்.

பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு, ஊழிய மூப்பும் ஆள்வினைத் திறமும் தமிழ்ப்பற்றுமுள்ள உதவி ஆசிரியரையும்; கல்லூரி முதல்வர் பதவிக்கு, அம் மூன்றுமுள்ள பேராசிரி யரையும் அமர்த்தலாம்.

மாவட்டக் கல்வியதிகாரி பதவிக்குத் தமிழ்ப்புலவர் தேர்வு முதனிலை தேறிய, ஊழிய மூப்புள்ள தலைமையாசி ரியரையும்; கல்வித்துறையியக்குநர் பதவிக்கு, தமிழ்ப் புலவர் பட்டம் பெற்ற, ஊழிய மூப்புள்ள மாவட்டக் கல்வியதிகாரி யையும் அமர்த்துதல் வேண்டும்.

பல்கலைக் கழகத் துணைவேய்ந்தர் பதவிக்கு, தமிழ்ப் பற்றும் தமிழ்ப் புலமையுமுள்ள கல்வித்துறை யியக்குநரை யேனும், பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவரையேனும், மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரையேனும் அமர்த்தலாம்.

மருத்துவப் பணிக்கு, அவ்வம் மருத்துவக் கல்லூரிப் பயிற்சி, நோய் நாடும் நுழைநோக்கு, மருந்து கூட்டும் அறிவு, நோயாளிமீதிரக்கம், பேராசையின்மை, மருத்துவப் பயிற்சி, இளமை தீர்ந்திருத்தல், விடாமுயற்சி, உளநூலறிவு ஆகியவை இன்றியமையாதன.

66

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

29

(குறள். 948)

"இளங்கணியன் முதுமருத்துவன்", "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்." என்பன கவனிக்கத்தக்கன.

வழக்கறிஞர் பணிக்கு, சட்டக்கல்லூரிக் கல்வி, பன்னாட் டுச் சட்ட அறிவு, ஏரணக் (Logic) கல்வி, வரலாற்றறிவு, நடு நிலைமை, பொய்யாமை, நாவன்மை, தருக்கத்திறன், நினை வாற்றல், முறை காத்தல், பகைவரை ஒப்புரவாக்கல் என்பன இன்றியமையாதன.

பொறிவினைப் பணிக்கு, அவ்வப் பொறிவினைக் கல்லூரிப் பயிற்சி, கணிதப் புலமை, சூழ்ச்சிவன்மை, வரைவுத் திறன், திட்டம் வகுப்பாற்றல், விரைமதி, ஊக்கமுடைமை, புதுப்புனைவுத் திறமை என்பன இன்றியமையாதன.