உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

89

கணக்கத்துறைப் பணிக்கு, கணிதப்புலமை, வணிகத் துறைக் கல்வியும், பயிற்சியும் தட்டச்சுச் சுருக்கெழுத்துத் தேர்ச்சி, கவின் கையெழுத்து, வாய்மை, சுறுசுறுப்பு, பொறுப்புடைமை ஆகியவை இன்றியமையாதன.

காவல்துறைப் பணிக்கு வளர்த்தியுங் கட்டுடம்பும், அஞ்சாமை, நேர்மை, நடுநிலை, அமைதிவிருப்பு, ஒழுங்கு டைமை, சுறுசுறுப்பு, கடுந்துயிலின்மை, காவல்துறைப் பயிற்சி, கடமையுணர்ச்சி, துப்பறியுந்திறன் முதலியன இன்றியமை யாதன. வளர்த்தியுங் கட்டுடம்பும்,

படைத்துறைப்பணிக்கு

தறுகண்மை, படைக்கலப் பயிற்சி, போர்த்துறைக் கல்வி, போர்ப் பண்பாடு, நம்பகம், நாட்டுப் பற்று, கடமையுணர்ச்சி, சமையகதி, துன்பம் பொறுத்தல், கடுந்துயிலின்மை, கட்டொழுங்கு, ஈகத் (தியாகத்) தன்மை என்பன இன்றியமையாதன.

எதிர்காலத்தில் உலகப் பொது ஆட்சி ஏற்பட்டுப் போர் முற்றும் ஒழிந்தபின், படைத்துறையார் பகைவரைக் கொல்கை மறமின்றிப் பண்பாட்டுக் கொள்கை மறமே கடைப்பிடிப்பர்.

மேலாளர் (Manager) பணிக்கு, கணக்கத்துறைப் பணியா ளருள் மூப்பு, தோற்றப் பொலிவு, குழும்பின (Company) அல்லது நிறுவனத்தின் (Establishment) வரலாற்றறிவு, பொறுப்புடைமை, பணியாளரை அடக்கியாளுந்திறமை, நடுநிலை, வாய்மை என்பன இன்றியமையாதன.

ஆள்வினைத் தலைவர் (Administrator) பணிக்கு, இந்திய ஆள்வினை ஊழியத் (I.A.S.) தேர்வு தேறல், தோற்றப் பொலிவு, பல்துறைப் பொது அறிவு, அஞ்சாமை, பணியாளரை அடக்கி யாளுந் திறமை, நடுநிலை, நேர்மை, ஊக்கமுடைமை, பொறுப்பு டைமை முதலியன இன்றியமையாதன. மாவட்டத் தண்டலாள ரும் (District Collectors) அவர்போன்ற பிறரும் ஆள்வினைத் தலைவராவர்.

ஆராய்ச்சியாளர் பணிக்குப் பரந்த கல்வி, நுண்மாண் நுழைபுலம், அஞ்சாமை, நடுநிலை, தன்னலமின்மை, மெய் யறியவா என்னும் ஆறும் இன்றியமையாதன.

நடுத்தீர்ப்பர் (Judge) பணிக்கு சட்டப்புலமை, பன்னாட்டு வழக்குத் தீர்ப்பறிவு, நுண்மாண் நுழைநோக்கு, பட்டறிவு, நடு நிலை, அஞ்சாமை, முறைகாத்தலை உயிர்நாடியாகக் கொள்ளு