உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

தல், மாலைக்காலத்தில் மாறுதோற்றத்தில் மக்கள் பேச்சினின்று மறையறிதல், தேவபத்தி முதலியன இன்றி யமையாதன.

அரசியல் திணைக்களத்தலைவர் (Head of a Department of Govt.) பதவிக்கு ஆள்வினைத் தலைவர் தகுதியொடு அவ்வத் திணைக்களத்திற்குரிய சிறப்பறிவு, சூழ்வினைத்திறன் முதலியன இன்றியமையாதன. ஒரு திணைக்களத்திற்குரிய சிறப்புத் தகுதி யுடையவரை வேறொரு திணைக்களத் தலைவராக்குவதும், சிறப்புத் தகுதியில்லாதவரையே பல திணைக்களத் தலைவராக அமர்த்திக் கொண்டு அடிக்கடி அவரைத் திணைக்களம் மாற்றுவதும், ஆட்சி யதிகாரிகளின் ஆற்றலின்மையையும் கழிகண்ணோட்டத்தையும் நடுநிலையின்மையையுமே காட்டும்.

அமர்த்ததிகாரிகள் (Appointing Authorities) பதவிக்குத் திணைக்களத் தலைவர் தகுதியொடு அடக்கமுடைமை, மனச் சான்று போற்றல், பழியஞ்சல் முதலிய பண்புகள் இன்றி யமையாதன.

உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி நடக்கையின்

ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்.'

""

(பழ.255)

அரசர், குடியரசுத் தலைவர், தலைமை மந்திரியார், மந்திரியார், ஆள்நர், முதலமைச்சர், அமைச்சர், பல்கலைக்கழகத் தலைவர், திணைக்களத் தலைவர், ஆள்வினைத் தலைவர், தனிப்பட்ட றுவனத் தலைவர் முதலியோர் அமர்த்ததிகாரிகளாயிருக்க லாம்.

ஆராய்ச்சித் துறைப் பன்மையும் இயல்பும்

அறிவியலும் (Science) கலையும் (Art) ஆன எல்லா அறிவுத் துறையும் தொழிற்றுறையும் ஆராய்ச்சிக்குரியனவே. பெரும் பாலும், ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும் ஒவ்வொரு துறைக் குரியவரே. பொறிவினைத் துறையில் (Engineering) பூதநூலும் (Physics) இதனியமும்(Chemistry) கணிதமும் (Mathematics) கலப்பதால், இயங்குபொறிப் புதுப்புனைவாள ரெல்லாம் (Inventors) இம் முந் நூலறிவும் உடையவராயிருத்தல் வேண்டும். இங்ஙனம் கலவைத் துறையல்லாத தனித்துறைகளி லெல்லாம், ஒரு நூலறி விருப்பினும் போதும். ஆயினும், வரலாற்றறிவு எல்லா நூலிலும் இரண்டறக் கலந்ததென்பதை அறிதல் வேண்டும்.